தலைப்பு : தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள்
ஆசிரியர் : கு.வெ.பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் : தமிழ்ப்பேராயம்
விலை : 70/-

பதிவு செய்த நாள்

23 பிப் 2018
13:39

தொல்காப்பியத்தில் அமைந்துள்ள ‘வீரநிலைக்கால எச்சங்கள்’ எனும் பொருண்மை  குறித்துப் பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் இந்நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார். இனக் குழுக்களாக வாழ்ந்த பழந்தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டுப் பொருதியதைப் பூசல் எனவும். போர் என்பது நாடுகளுக்கிடையே ஒரு தலைமையின் ஏவலில் படைகள் இயங்கிச் செல்லும் செயலாகும் என்றும் நூலாசிரியர் விளக்கியுரைக்கிறார்.

மண்டைத் தமிழர்களின் வீர மரபை விளக்க அவர் உலக மொழிகளின் இலக்கிய இலக்கணங்களோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார். மாமன்னர்கள் நடத்திய கடுமையான போர்களால் மக்களிடையே அமைதி குலைந்து அலமரலும் தெருமரலும் மிக்கிருப்பதைப் புலவர்கள் மன்னர்களின் உள்ளம் கொள்ளுமாறு செவியறிவுறுத்தி மன்னர்களை உணரச் செய்தனர் என்று தொல்காப்பியம் கூறும் செய்தியை ஆசிரியர் இந்நூலில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

- மு.பொன்னவைக்கோ

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)