பதிவு செய்த நாள்

23 பிப் 2018
13:52

தமிழ் பக்தி இலக்கியப் பரப்பில் ஆண்டாள் தவிர்க்க முடியாத ஆளுமை. தோழியர், கூட்டுணர்வு, ரகசியம், காதல், காமம், கிளர்ச்சி, விடுதலை உரையாடல் என அவர் காலத்தில் எடுத்தெழுதிய தீவிரங்களை ஆண்டாளின் பாடல்கள் ஒலிக்கின்றன. அவரது பாசுரங்களை நாடகவடிவில் வழங்கும் நிகழ்ச்சியை நாடகக் கலைஞர் வெளி.ரங்கராஜன் மற்றும் பகுர்தீன் (உதவி) முன்னெடுத்திருக்கிறார்கள். இந்நிகழ்வில் ஆண்டாளாக அஷ்விணி, பாடல் இசைப்பவராக வைஜயந்தி, ஆயர்குலப் பெண்களாக ஹேமலதா, பானுப்ரியா, ஸ்டெஃபி, ரேணுகாதேவி ஆகியோர் பாத்திரமேற்கிறார்கள். ஓவியங்கள் மருது மற்றும் ஜே.கே இருவரும் பங்களிக்க ஒலிக்கோவை வினு, ஒளி அமைப்பு பாஸ்கர் செய்திருக்கிறார்கள். சென்னை, கல்லூரிச் சாலையில் அமைந்துள்ள அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கத்தில் வரும் 03.03.2018 மாலை 7.00மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)