பதிவு செய்த நாள்

23 பிப் 2018
16:52

 ஈழ அரசியல்  அறிஞரும், எழுத்தாளருமான மு.திருநாவுக்கரசுவின் புதிய நூலான “பூகோளவாதம்- புதிய தேசியவாதம்” நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை யாழ்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சரான சி.விக்னேஸ்வரன் பங்கேற்று நூலை வெளியிடுகிறார். சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் பா .செயப்பிரகாசம் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். முன்பாக, டொனமூர் முதல் சிறிசேனா வரை, தேசியமும் ஜனநாயகமும், சமஷ்டியா தனிநாடா, ஒற்றைமைய உலக அரசியலில் போரும் சமாதானமும் ஆகிய மு.திருநாவுக்கரசுவின் நூல்கள் ஏற்படுத்திய அரசியல் சலசலப்பு போலவே ‘பூகோளவாதம்-புதிய தேசியவாதம்’  நூலும் அதிருப்தியாளர்களிடையே விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

இப்புத்தகம் ஈழ அரசியலிலும் மற்றும் அதன் நிகழ்கால முன்னெடுப்புகளிலும் மிகப்பரந்த பார்வையாக உலகளாவிய வரலாற்று நிகழ்வுகள், கலாச்சார தன்னிருப்புப் போராட்டங்கள், பூகோள அரசியல், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், காலனிய ஆதிக்கம் மற்றும் தற்கால அரசியல் எனப் பல விஷயங்களை உள்ளடக்கி ஒரு புதுவிதமான அணுகுமுறையை முன்வைக்கிறது. இது ஈழ அரசியலின் மறு கண்டெடுப்பு என்றே நூலிற்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் ராமு மணிவண்ணன் குறிப்பிடுகிறார்.

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)