பதிவு செய்த நாள்

23 பிப் 2018
16:58
றெக்கை - சிறார்களுக்கான புதிய மாத இதழ்

மிழ்ச் சூழலில் பல்வேறு சிறுவர் இதழ்கள் றெக்கை கட்டிப் பறந்த காலங்கள் உண்டு.  வெகுஜன வார இதழ்களைக் கடந்து ஒரு தனி வாசிப்பு வட்டத்தை இந்த சிறார் இதழ்கள் தன்வசம் வைத்திருந்தன. அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் போன்ற பல்வேறு இதழ்கள் இதற்கு உதாரணம் என்பதை அன்றைய காலத்து சிறுவர்கள் அறிவார்கள்.

அதன்பிறகு பல்வேறு சிறார் இதழ்கள் வெளிவந்தாலும் பெரிதான கவனத்தை ஈர்த்தது இல்லை. ஆனால், இந்தப் பிப்ரவரி மாதத்தில் இருந்து வெளியாகும்  ‘றெக்கை சிறார் கலகல மாத இதழ்’ மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கிறது. தரமான காகிதத்தில் குழந்தைகள் படிப்பத்தற்கு ஏதுவாக பக்க வடிவமைப்புகளுடன் இந்த இதழ் வெளியாகியிருக்கிறது. கதை, விளையாட்டு, கலை, இலக்கியம், சினிம, சாதனை, படக்கதை, காலண்டர், சூழலியல் என பல்வேறு தலைப்புகளிலான படைப்புகள் இவ்விதழில் இருக்கின்றன.

அச்சுவடிவில் படிக்க வேண்டுமென்றால் ஓர் இதழின் விலை 40 ரூபாய். ஆண்டுச் சந்தா 400 ரூபாய்.  மேலும் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், இணையத்தின் வழியாக  இலவச இ- இதழாகவும் படிக்க வழிவகை செய்திருக்கிறார்கள்.

தொடர்புக்கு : 9884208075 / 7358645516வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)