பதிவு செய்த நாள்

24 பிப் 2018
17:29

ந்த நல்லூர் அருகில் சிந்தாமணிக் குப்பம் என்றொரு சிற்றூர் இருந்தது. அங்கே வந்தனா, நந்தன், கந்தன் என்ற மூவரும் ஒரே பள்ளியில் பயின்று வந்தனர். அந்த மூவரும் நண்பர்களாகவும் இருந்தனர். மூவரும் அன்புடன் சொந்தமாக பழகினர். படிப்பிலும் ஒருவரையொருவர் முந்தும் வண்ணம் கல்வி கற்பர்.

ஒருநாள் காலை வந்தனா செய்தித் தாளில் ஒரு செய்தியைப் பார்த்து அதிர்ந்து போனாள். செய்தித் தாளில் யானை ஒன்று இறந்துக் கிடந்ததைப் படம் பிடித்துப் போட்டிருந்தனர். தந்தத்திற்காக அந்த யானையைக் கொன்றுவிட்டிருந்தனர் கயவர்கள். வந்தனா அதைப் பார்த்து மிகவும் வருந்தினாள். அப்போது நந்தன் தான் வளர்க்கும் நாய்க்குட்டி சுந்துவுடன் அங்கு வந்தான். என்ன வந்தனா ஏன் வருந்துகிறாய்? எனக் கேட்டான். வந்தனா செய்தித்தாளைக் காண்பிட்து செய்தியைச் சொல்ல, சரி வா சிறுவர்களாகிய நாம் என்ன செய்வது? சுந்துவுடன் விளையாடலாம் வா எனக் கூறி ‘சுந்து ஓடிப்போய் அந்த பந்தை எடுத்து வா பார்க்கலாம்’ என்று எறிந்தான்.

சுந்துவும் ஓடிப்போய் பந்தைத் தன் வாயால் கவ்விக் கொண்டுவந்தது. வந்தனாவும் தன் கவலை மறந்து மகிழ்ந்தாள்.. அந்த நேரம் வந்தனாவின் தாய் இருவருக்கும் வறுத்த முந்திரிப் பருப்புகளை உண்ணத் தந்தாள். அன்று இரவு சுந்து தீவிரமாக குரைக்கும் சத்தம் கேட்டு சுந்தன் வீட்டினரும், நந்தன் அப்பாவும் சென்று பார்த்த போது தந்தங்களைக் களவாடிய கயவன் பதுங்கியிருப்பதினைக் கண்டு அவனை பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்தனர். வந்தனாவின் தந்தைக்கு செய்தியைத் தெரிவிக்க, அவர் தொலைபேசியில் காவல்துறையினருக்குத் தகவல் தந்து திருடனைப் பிடித்துப் போக ஆவண செய்தார். வந்தனாவின் மன சாந்தியுற்றது.

பா.தமிழ்மொழி
தமிழ் ஆசிரியர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)