பதிவு செய்த நாள்

25 பிப் 2018
02:05

 தாழ்வாரம் நவீன கலை இலக்கியக் களம் துவக்கவிழா கும்பகோணம், ஹோட்டல் ராயாஸ் க்ரீன்லேண்ட் அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்வை எழுத்தாளர் கண்மணி குணசேகரன் மற்றும் பாடலாசிரியர் ஏகாதசி இருவரும் துவக்கிவைத்துச் சிறப்புரை ஆற்றுகிறார்கள். கவிஞர் கனிமொழி.ஜி, ஓவியர் தனசீலன், கவிஞர் மு.அய்யூப்கான், எழுத்தாளர். புலியூர் முருகேசன், கிருஷ்ணப்பிரியா, மற்றும் கவிஞர்கள் யாழி கிரிதரன், தேவரசிகன், சுகபாலா, சத்யன், மன்னர் மன்னன், அன்புமணி, வினையன், துரைகுணா, குமார் கந்தசாமி, ஜே.தமிழ்ச்செல்வன், சோலச்சி, துவாரகா சுவாமிநாதன். இதழாசிரியர் சோழநிலா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். இரண்டாம் அமர்வான விமசனக் களத்தில் பாடலாசிரியர் ஏகாதசியின் ‘மஞ்சள் நிற ரிப்பன்’ தொகுப்பினைக் குறித்து விமர்சகர் இதயத்துல்லா, பாக்கியம் சங்கரின் ‘நான் வடசென்னைக்காரன்’ குறித்து கவிஞர் நிலாதரன், மீனா சுந்தரின் ‘மருதத்திணை’ குறித்து கவிஞர் முருகதீட்சண்யா, கே பாக்கியாவின் ‘செண்டிமீட்டர் அளவில் தூண்டப்படும் கடல்’ குறித்து கவிஞர் ஸ்டாலின் சரவணன் ஆகியோர் கருத்துரை வழங்குகிறார்கள். நிகழ்ச்சியை கவிஞர் கு.இலக்கியன் ஒருங்கிணைக்க கோ.பாரதிமோகன் நன்றியுரை வழங்குகிறார். செருகுடி.செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றுகிறார். 

இடம் : ஹோட்டல் ராயாஸ், கிரின்லேண்ட் அரங்கம், தலைமை அஞ்சலகம் அருகில், கும்பகோணம்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)