பதிவு செய்த நாள்

26 பிப் 2018
12:59

 ருடம்தோறும் சிங்கப்பூர் வாசகர் வட்டம் சார்பாக ஆண்டுவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களில் எழுத்தாளர் ஜெயமோகன், ஜோ டி குருஸ், நாஞ்சில்நாடன் மற்றும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த வருடம் நடைபெற இருக்கும் ஆண்டு விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார். வருகிற சனிக்கிழமை அன்று (மார்ச் 3) மாலை 5.30 மணிக்கு, சிங்கப்பூர் உட்லன்ஸ் அரங்கில் நடைபெற இருக்கிற  இவ்விழாவில் ‘உலகச்சிறுகதைகள்’ என்கிற தலைப்பில் சாரு நிவேதிதா உரையாட இருக்கிறார்.

மேலும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு அங்மோகியோ நூலகத்தில் சாரு நிவேதிதாவுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. இவ்விரு நிகழ்வுகளுக்கும் அனுமதி இலவசம்.

தொடர்புக்கு : 97733186



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)