பதிவு செய்த நாள்

26 பிப் 2018
17:06

 முன்னொரு காலத்தில் சிம்ம வனம் என்றொரு அடர்ந்த வனம் இருந்து வந்தது. அவ்வனத்தில் பொம்மன் என்ற வேடன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் காலை தன் வில்லயும், அம்பையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் வேட்டையாடச் செல்வான்.  அவனுடன் அவனது தம்பி திம்மனும் செல்வான். ஒருநாள் காலை இருவரும் சேர்ந்து செல்லும்போது ஏதோ சத்தம் வரவே அத்திக்கைப் பார்த்து செல்லத் தொடங்கினர். அங்கே பூம், பூம் என்ற சங்கின் நாதமும், ஓம் என்ற ஓம்கார ஓசையும் அவர்களது செவியில் நுழைந்தது. அவர்கள் ஆவலுடன் அந்தப் பக்கம் ஓடினர்.

அவர்களுக்கு அங்கொரு அதிசயம் காத்திருந்தது. பாம்பும், புலியும், சிங்கமும், தேளும், நரியும், மானும் சத்தம் போடாமல் மிக அமைதியாக தத்தம் இயல்பான குணம் மறந்து முனிவர் ஒருவரின் எதிரில் நின்று கொண்டிருந்தன. அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த இருவரும் அந்த யோகியைப் நோக்கி வணங்கினர். முனிவர் தமது பூசையை முடித்துக்கொண்டு பின் இருவரையும் பார்த்தார்.

அய்யா நீவிர் யார்? எனக் கேட்ட போது முனிவர் நான் தவம் செய்வதற்காக இக்காட்டை வந்தேன் என்றார். அண்ணனும், தம்பியும் நீங்கள் வந்தது இக்கானகமும், நாங்களும் செய்த புண்ணியம் என்று அவரை மீண்டும் வணங்கினர். அப்போது அவர்களைப் பார்த்த புலியும், சிங்கமும், நரியும் மற்ற விலங்குகளும் ஓடி ஒளிந்தன. முனிவர் அவர்களைப் பர்த்து சிரித்தார்.

‘அன்புக்குக் கட்டுப்பட்டு நின்ற ஐந்தறிவு மிருகங்களும் உம்முடைய அம்பைக் கண்டவுடன் பயந்து ஓடி ஒளிந்தன  பார்த்தீர்களா?’
‘ஐயா, அன்பின் மகிமை அறிந்தோம். ஆனால் இனி நாங்கள் பிழைப்புக்கு என்ன செய்வது?’ என்று கேட்டனர்.
அதற்கு முனிவர் ‘நீங்கள் இனி மிருகங்களை வேட்டையாடாமல் பழம், தேன், சந்தனம் போன்றவற்றை சேகரித்து அதை விற்று உங்கள் வாழ்வை நடத்துங்கள். உங்கள் குணமும், மனமும் செம்மைப்படும்’ என வாழ்த்தினார்.

- பா.தமிழ்மொழி, தமிழ் ஆசிரியர்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)