பதிவு செய்த நாள்

03 மார் 2018
17:08
மிட்நைட்’ஸ் சில்ரன் - சல்மான் ருஷ்டி

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா விடுதலை அடைந்தபோது பிறந்த குழந்தைகள் ஒரு அபார சக்தியும் ஆசிர்வாதமும் கொண்டவர்கள். அப்படி நள்ளிரவில் பிறந்தவர்தான் சலீம். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் பிறந்தது முதல் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் அவசர கால சட்டம் இருந்த கருப்பு நாட்களான எமெர்ஜென்சி வரை சலீமின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிய பதிவு இந்த புத்தக்கம்.

சலீம், அவரைப் போன்று சுதந்திரத்தின்போது பிறந்தவர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கையை அறிந்துகொள்வதில் ஆர்வம் உள்ளவர். அவரின் வாழ்க்கையோடு சேர்த்து அவரைப் போன்றவர்களைப் பற்றிய பதிவுகளையும் சல்மான் ருஷ்டி இதில் பதிவுசெய்து இருக்கிறார். இந்திய துணைக் கண்டத்தில் பிறந்த ருஷ்டி லண்டனில் படித்தவர். இந்திய மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் ஆர்வம் கொண்டவர். அவருடைய மேஜிக்கல் ரியாலிசம் புத்தகங்களும் வரலாற்றுப் புத்தகங்களும் பல விருதுகளைப் பெற்றுள்ளன.
- கவிமணி

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)