பதிவு செய்த நாள்

03 ஜூலை 2017
17:34

டல்வழி வணிகம் நூலில் இருந்து சில தகவல்கள்...“ஹிப்பலஸ் என்ற கிரேக்க மாலுமிதான் முதன் முதலாக பருவக்காற்றைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதன் உதவியால் கப்பல் செலுத்த முடியுமென்பதை உலகுக்கு அறிவித்தான். ஆகையால்தான், பருவக்காற்று ஹிப்பலஸ் என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது.

கடல்வழி வணிகம் புத்தகம்
கடல்வழி வணிகம் புத்தகம்

அப்போதுதான் ஹிப்பலஸ், பருவக்காற்றின் முறையான காலத்தையும் நிர்ணயித்தான். அவன், பரிசீலித்ததிலிருந்து பருவக்காற்றுகள் அரபிக்கடலில் தென்மேற்காக ஏப்ரல் மாதத்திலிருந்து அக்டோபர்  மாதம் வரை வீசுவதையும், பிறகு சரியாக அக்டோபரிலிருந்து ஏப்ரல் வரை வடகிழக்காக வீசுவதும் தெரியவந்தது. 

இதைக் கப்பலோட்டிகள் தமக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் அறிவித்தான். அப்போது கடல்வழி வணிகம் சீராய், கரை தொட்டு வராது, நேராகக் கடல் வழியாகச் செங்கடலுக்கும் சேர நாட்டுக் கடற்கரைக்கும் இடையே ஏற்பட்டது. இதனால் பெரும் பயனைப் பெற்ற வணிகர்கள் தமது வணிகத்தை அதற்கேற்றவாறு அமைத்துக்கொண்டனர். பருவக்காற்றின் உதவியால் பயண காலம் குறைந்தது மட்டுமின்றி, கடல்வழி அபாயங்களும் குறைந்தன.”வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)