பதிவு செய்த நாள்

06 மார் 2018
14:14

லையுச்சியில், ஒரு ஆடும், அதன் சிறு குட்டியும் மேய்ந்துகொண்டிருந்தன. வானத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகு, அந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்தது, ஏற்கெனவே பயங்கர பசியிலிருந்த அந்தக் கழுகுக்கு, இந்த ஆட்டுக்குட்டியைக் கண்டதும், நாக்கில் எச்சில் ஊறியது!

உடனடியாக, அந்த ஆட்டுக்குட்டியைப் பிடித்துத் தின்றுவிடுகிற எண்ணத்துடன், தரையை நோக்கிப் பாய்ந்தது அந்தக் கழுகு.

இதே நேரத்தில், அங்கு வந்த இன்னொரு பசித்த கழுகும் அதே ஆட்டுக்குட்டியை நோக்கிப் பாய்ந்தது.

இந்தப் புதிய கழுகைக் கண்ட முதல் கழுகு, கோபம் கொண்டு, அதன்மேல் பாய்ந்து சண்டையிடலானது, அவற்றின் ஆக்ரோஷமான கூக்குரல் வானத்தை நிரப்ப, அவை பயங்கரமாகப் போரிட்டன.

இந்தச் சப்தம் கேட்டு, மேலே நிமிர்ந்து பார்த்த ஆடு, இந்தச் சண்டையைக் கண்டு ஆச்சரியப்பட்டது, பின்னர் தன் குட்டியை நோக்கித் திரும்பி, ’மகனே, அத்தனை பெரிய வானம், இந்த இரண்டு பறவைகளுக்குப் போதவில்லையா ? ஏன் இவை இப்படிச் சண்டையிடுகின்றன ?’, என்று வேதனைக் குரலில் கேட்டது, ’மகனே, நம் கழுகுச் சகோதரர்கள், இந்தச் சண்டையை நிறுத்தவேண்டும், அவற்றிடையே மீண்டும் அமைதி திரும்பவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொள் !’

இதைக் கேட்ட ஆட்டுக்குட்டி, அவ்வாறே மனமுருகிப் பிரார்த்தித்தது !



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)