பதிவு செய்த நாள்

13 மார் 2018
12:15

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவகசிந்தாமணி.

ஐம்பெரும் காப்பியங்களில் முழுமையாகக் கிடைத்தவை மூன்று. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி

விருத்தப்பா என்னும் பா வகையால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி

வடமொழியில் உள்ள சீவகன் என்னும் அரசனின் கதையைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல்.

சிந்தாமணி என்பதற்கு, 'ஒளி குன்றாத மணி' என்று பொருள்.

இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்க தேவர் சமண முனிவர். சோழர் குடியில் பிறந்த இவர், திருத்தகு முனிவர் என்றும் திருத்தகு மகாமுனிவர் என்றும் அழைக்கப் பெறுகிறார்.

சமணத் துறவிகள் அறக்கருத்துகளை மட்டுமன்றி இல்லறச்சுவையையும் பாடமுடியும் என்பதை நிறுவும்பொருட்டு இந்நூலை இயற்றினார் திருத்தக்க தேவர்.

திருத்தக்க தேவரை 'தமிழ்க் கவிஞர்களுள் சிற்றரசர்' என்று வீரமாமுனிவர் பாராட்டியுள்ளார்.

சீவகசிந்தாமணிக்கு முன் 'நரி விருத்தம்' என்னும் சிறு நூலை திருத்தக்க தேவர் இயற்றியுள்ளார்.

இந்நூல், பதின்மூன்று பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டது. அந்தப் பிரிவுகளுக்கு இலம்பகம் எனப் பெயர்.

முத்தி இலம்பகம் தவிர்த்து மற்ற இலம்பகங்கள், பெண்களின் பெயரில் அமைந்துள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில், திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சீவகசிந்தாமணி 3,145 பாடல்களைக் கொண்டது.

இக்கதையின் நாயகன் சீவகன், எட்டுப் பெண்களை மணந்தான். அதனால் இந்நூலுக்கும் மணநூல் என்ற பெயரும் உண்டு.


- நிலவரசன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)