பதிவு செய்த நாள்

13 மார் 2018
16:11

 மணவழகன்
சிட்டுக்குருவிகள் பற்றியே 
சிந்தைகொண்டிருக்கிறான்
புறாக்கள் குறித்தே பேசுகிறான்
மனசு பூராவும் செண்பகப்பூக்கள்
மகிழம்பூக்கள் கடம்பு / தேக்கு
குல்மொஹர் / போகன்வில்லாவெனில்
கொண்டாட்டம்தான் அவனுக்கு
கன்றுகளை / செடிகளை
கையிலேந்திக்கொள்வதில் மிகுந்த விருப்பம்
முல்லைக்கொடி படரக் கொழுகொம்பில்லையென்றால்
உள்ளம் வாடிப்போவான்
மனுஷர்கள் / மனுஷிகளைப் பார்ப்பது
முற்றமுழுக்க பிரியமாகவே
மணவழகன் சிறுகதைகள் / கவிதைகள்
தனிதாம் நவீனதமிழிலேயே

எதுவுமற்று 

வடக்கேயிருந்து
வேதாந்தம்
தெற்கில்
சைவசித்தாந்தம்
கிழக்கே
தாவோயிஸம்
மேற்குலகில்
மார்க்ஸியத்திலிருந்து என்னென்னவோ
எதுவுமற்று
வாழ்கிறார்கள் பூர்வகுடிகள்!

- கவிஞர் விக்ரமாதித்யன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)