பதிவு செய்த நாள்

15 மார் 2018
15:29

கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சார்பில், சிறந்த தமிழ் நூல் போட்டி நடக்கிறது. இதில் வெற்று பெறும் தமிழ் நூலுக்கு, ஆறு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

மலேஷியாவில் செயல்படும், கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சார்பில், சிறந்த தமிழ் நூலுக்கான போட்டி நடக்கிறது. இப்போட்டிக்கு நாவல், வரலாறு, ஆய்வு, சிறுகதை, கவிதை உள்ளிட்ட பிரிவுகளில் நூல்களை அனுப்பலாம்.

இதில், கல்வி தகுதிக்காக உருவாக்கப்படும் ஆய்வேடு, ஏற்கெனவே வெளிவந்த நூல்கள், மறுபதிப்பு நூல்கள், நூலாசிரியரின் சொந்த வரலாற்று நூல் ஏற்றுக்கொள்ளப்படாது. ஒருவர், ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும். நூலாசிரியரோ, நூலை பதிப்பிக்கும் பதிப்பகத்தாரோ, நூல்களைப் போட்டிக்கு அனுப்பலாம்.

நூல்கள், போட்டி அறிவிக்கப்பட்ட, 2016 அல்லது 2017ம் ஆண்டில், முதற்பதிப்பாக இருக்க வேண்டும். போட்டிக்கு, ஐந்து நூல் பிரதிகளை, மார்ச், 31க்குள் அனுப்ப வேண்டும். மூன்று மாத பரிசீலனைக்குப்பின், முடிவு அறிவிக்கப்படும்.

இதில் வெற்றிபெறும் சிறந்த தமிழ் நூலுக்கு, 6.50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். விண்னப்பத்தை, tணூச்ணண்ணூடிண்ணிட்ச்ஞணிணிடுச்தீச்ணூஞீ.ஞிணிட்.ட்தூ என்ற இணைதளப் பக்கத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.எண். 9, சங்கரபாணி தெரு, தி.நகர், சென்னை - 17 என்ற முகவரிக்கு நூல்களை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 04 - 28340488, 28343224 ; 9600007818/19 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)