பதிவு செய்த நாள்

15 மார் 2018
16:39

 

தில்களும் கம்பிகளும் காவலுமில்லாத
சுதந்திரச்சிறையில்
விண்மீன்களும் நிலவும் சூரியனும் வெக்கையும் குளிரும்
அதிசுதந்திரமாக வந்துபோகின்றதால்
நாட்காட்டியின் தாள்கள் நாள் தவறாமல் 
கிழிபட்டுக்கொண்டே போகின்றன
கடலற்ற இந்நிலத்தில் மீட்பருக்காக காத்திருப்பது
முட்டாள்தனமெனினும்
ஒரு கோடை மழையின் துளி தீண்டலில்
முளைத்துவிடும் விதைகளை
நிலமெங்கும் பத்திரப்படுத்தியிருக்கின்றேன்.
***

குழந்தைகளற்றுப்போன
போர் முடிந்த பிரதேசத்தில் 
பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருப்பவனை 
மொய்க்கிறார்கள் மனம் பிறழ்ந்தவர்கள்
ஓகே தோழர்...ரெண்டையும் போட்டுக்குறேன்.

- கவிஞர் ஆன்மன்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)