பதிவு செய்த நாள்

16 மார் 2018
12:00
லங்கா ராணி நாவல் குறித்து கலந்துரையாடல்

வாசகசாலையின் சிறப்புத் தொடர் நிகழ்வான ஈழத்தமிழ் எழுத்தாளர் வரிசையின் ஏழாவது நிகழ்வு நாளை மார்ச் 17ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் அருளர் எழுதிய லங்கா ராணி நாவல் குறித்து கலந்துரையாடல் நிகழவிருக்கிறது. 1977 ஆகஸ்டில் இலங்கையில் இனக்கலவரம் நடந்த பொழுது, 1200 தமிழ் அகதிகளைச் சுமந்து கொண்டு கொழும்புத் துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை துறைமுகம் நோக்கி வந்த லங்கா ராணி என்ற கப்பலின் பயணக் கதைதான் இந்த நாவல். ஒரு நிஜ வரலாற்றைப் பேசும் இந்த நாவல் பற்றி ஊடகவியலாளர் செல்வ புவியரசன் சிறப்புரையாற்றுகிறார். அரிசங்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் வாசகப் பார்வையைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்,
நேரம் : மாலை 5.30 முதல் 6.30 வரை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)