பதிவு செய்த நாள்

21 மார் 2018
13:12

 காதல்னு சொல்றாங்க இல்லையா.... ஒரு காலத்துல ரொம்ப புனிதமாவும், அடேயப்பா அப்படிங்கிற மாதிரியும், நினைச்சு நினைச்சு உருகுற மாதிரியான விஷயமாக இருந்தது வாஸ்வதவம் தான். ஆனா என்னுடைய வாழ்க்கையில அப்படி பெண் சம்பந்தப்பட்ட நிகழ்வு வந்து... வந்து... வந்து போச்சே தவிர... நிக்கலை. கணக்கு வழக்கு இல்லாத பெண்கள் என்னுடைய வாழ்க்கையில் வந்துட்டு போயிருக்காங்க. ஆனா அதை இப்ப நினைச்சுப் பாக்கும்போது அது காதல் கிடையாதுனு தோணுது.

ஆனா அவங்களுக்கு என்னைப்பத்தி எப்படி இருந்திருக்கும்னு தெரியலை. அதை நான் கேட்டு தெரிஞ்சுக்கிடவும் முடியலை. வாழ்க்கையில மறக்க முடியாத பெண்கள்னு இருக்கில்லையா? அப்படி உண்டு. அதை காதல்னு எப்படி சொல்றதுன்னு தெரியலை. அப்புறம், உடல் கல்வி மாதிரி, உடல் சம்பந்தப்பட்ட இன்பங்கள் இருக்கில்லையா...அதுல வழக்கமாக இருக்கிறது, அதாவது தினமும் சாப்பிடற மாதிரி, ஓட்டல்ல போயி சாப்பிட்டுட்டு வர்ற மாதிரி... வீட்டுல சாப்பிட்டு போற மாதிரி... அந்த மாதிரியான விஷயங்கள் இருக்கில்லையா, அதைத் தவிர, பல்வேறு கோணங்கள்... பல்வேறு தருணங்கள்.. பல்வேறு அனுபவங்களைக் கொடுத்தது சில பெண்கள் தான். அவங்களை மறக்க முடியறது இல்ல. ஆனா, அவங்களை பாக்குறதுக்கு ஏங்குறது, காணாமல் இருக்கிறமேன்னு வருந்துறது, இந்த மாதிரியான விஷயங்கள் ரொம்ப ரொம்ப குறைவு.

இப்பலாம் காதலர் தினம் அப்படின்னா ஒரு சிரிப்புதான் வருது. பணம் நம்மகிட்ட வந்து அதை செலவழிச்சு அனுபவிக்கிறோமில்லையா.. அந்த மாதிரி, இல்லாத ஒருத்தன்கிட்ட பணம் சேர்ந்து செலவழிச்சு, அதுக்கப்புறம் ஒன்னுமில்லாம போயிடுதில்லையா?! அந்தமாதிரி தான் இந்த விஷயங்களோன்னு இருக்கு. இப்ப, மனோ ரீதியான சில கிளுகிளுப்புகள் தோன்றது உண்டு. ஆனா உடல் ரீதியாக ஒன்னும் கிடையாது இப்போ. மனோ ரீதியாக அந்தமாதிரியான ஆசைகள் எண்ணங்கள் நினைப்புகள் இருக்கு. அப்படி நான் இன்னும் எழுதாதது விஷயங்களே கூட  நிறைய இருக்கு.

ஒரு காலத்துல ‘கனிகள்’ அப்படின்னு ஒரு நாவல் எழுதப்போறதா சொல்லிகிட்டே இருந்தேன். அப்படி சொன்னபோது அந்த நாவலை எழுதிட்டீங்களா என்னா ஆச்சு எப்போன்னு கேட்டுட்டே இருந்தவங்க ரெண்டு பேருதான். அதுல ஒருத்தர் வல்லிக்கண்ணன், இன்னொருதர் ஜெயகாந்தன்.  இந்த ரெண்டு பேரும்தான் கேட்டுகிட்டே இருந்தாங்க. அப்புறம் ‘இந்தாளு எழுதப்போறது இல்லைன்னு’ கேட்குறதையே விட்டுட்டாங்க . இப்பவும் நினைச்சா கூட அதை எழுத முடியும்னு தோணலை. ஏன்னு கேட்டா அதுல எழுதுறதுக்கு என்ன இருக்கு? அப்படிங்கிற மாதிரிதான் தோணுது.

ஆனா எழுதணும்னா எழுதலாம்...ஆனா சரியா இருக்காது. பலகாரங்கல்ல ரொம்ப அதீதமான இனிப்பு பலகாரங்கள் இருக்கு, அதை சும்மா சாப்பிட்டு பாக்கலாம். ஆனா, அதை ருசிச்சி அதிகமா ரொம்ப நேரம் சாப்பிட முடியாது.  ஆனா அதே சமயத்துல இனிப்பு இல்லாமலும் இருக்க முடியாது. அந்த மாதிரிதான் இந்த விஷயங்கள் எல்லாம்.

- கி.ராவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)