பதிவு செய்த நாள்

18 ஜூலை 2017
11:54

 தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2017, ஜூலை 21 முதல் 31 வரை மூன்றாவது மாபெரும் சென்னை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இந்தியா முழுவதுமிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்று கோடிக்கணக்கான புத்தகங்களை வாசகர்களின் பார்வைக்கு வைக்க உள்ளனர்.

கடந்த வருடம் நடந்த புத்தகத் திருவிழா
கடந்த வருடம் நடந்த புத்தகத் திருவிழா


இந்தப் புத்தகத் திருவிழாவின் முன்னோட்டமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இணைந்து பங்கேற்கும்  ”சென்னை வாசிக்கிறது” நிகழ்ச்சி ஜூலை 18 அன்று காலை 10 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்சிஏ மைதானத்தில்  நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு கல்வி நிலையங்களின் மாணவர்கள், ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து குழந்தை எழுத்தாளர் டிம்முரே மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் இலக்கிய நிகழ்வுகளாக, கவிதை வாசித்தல், மாகன் இராமானுஜர் 1000 ஆம் ஆண்டுச் சிறப்புக் கருத்தரங்கம், சினிமாத் துறை பிரபலங்கள்  கலந்து கொள்ளும் நிகழ்வு, மாமேதை மார்க்ஸ் 200-ஐ சிறப்பிக்கும் கருத்தரங்கமும் நடைபெறும்.  மேலும் மாலை 4 மணி முதல் சென்னை நூலகங்கள், சிறுவர் இலக்கியம், தாய்மொழிச் சிக்கல்கள், பெண்களும் அதிகாரமும், சுற்றுச் சூழலும் எழுத்தும், சட்டமும் மக்களும், எனப் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)