பதிவு செய்த நாள்

27 மார் 2018
15:57
வுமன் அட் பாயின்ட் ஜீரோ - நாவல் எல் சாடவி

 தூக்குத் தண்டனை கைதியாக ஒரு கொலை வழக்கில் சிறையில் இருந்த பாலியல் தொழில் செய்துவந்த ஃபிர்டியஸ் என்ற பெண்ணைப் பற்றிய கதைதான் இந்த நாவல். 1975ல் இந்த நாவலை அரபு நாட்டில் எழுதி வெளியிட்டார் சாடவி. ஒரு மருத்துவ இதழில் ஆசிரியராக பணியாற்றிவந்த சாடவி, தனது வேலையை ராஜினாம செய்துவிட்டு, எகிப்திய பெண்களைப் பற்றிய ஆய்வு செய்துவந்தார். சிறையில் மருத்துவராக இருக்கும் தனது நண்பரின் மூலம் சிறையில் இருக்கும் பெண்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆர்வத்தில், கைரோ சிறையில் இருக்கும் பெண்களைச் சந்தித்தார்.

அங்கு எத்தனையோ பெண்களை சந்தித்து இருக்கிறார். அதில் அவரை மிகவும் ஈர்த்தவர் ஃபிர்டியாஸ். தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த ஒருவரை எதிர்பாராத விதமாக கொலை செய்துவிட்டு சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கிறார். ஃபிர்டியாசின் வாழ்க்கையை அப்படியே இந்த நாவலில் வெளிப்படுத்தியிருக்கிறார். 100 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலை ஏழு நாட்களிலேயே எழுதி முடித்திருக்கிறார். இதனை செட் பிரஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

- கவிமணி

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)