இந்த நாவல் முழுவதும் ஆங்கில மொழியின் கிளை மொழியான டிரினிடாட் என்ற மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி தெரியாதவர்கள் படித்தால்கூட இரண்டு பத்திகளுக்குமேல் படித்ததும் புரிந்துவிடும் அளவுக்கு எளிய வடிவில் எழுதப்பட்டு உள்ளது.
இந்த கதை இவா என்பவர் விவரிப்பதுபோல் தொடங்குகிறது. இவா என்பவர் பாபிஸ்ட் என்ற ஆன்மிக வழிபாட்டை பின்பற்றுபவரை திருணம் செய்துகொண்டார். அம்மதம் 1917ஆம் ஆண்டில் அரசின் காலனிய ஆதிக்கத்தினால் தடை செய்யப்பட்டது. அந்த மத வழிபாட்டை தடை செய்தது தொடங்கி, 1951 ஆம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்ட நாளில் கதை முடிகிறது.
பாபிஸ்ட் என்ற கிறித்துவ வழிபாட்டைக் கொண்ட மக்கள், அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர். அதனை இவாவின் கணவர் எதிர்க்கத் துணியவில்லை. கடைசியில் அரசின் சட்டத்துடன் சமரசமாகிப்போவது என்று முடிவு செய்து அவரைச் சுற்றியுள்ள ஏழை மக்களை அழித்துவிடுகிறார் என்ற சோகத்துடன் முடிகிறது இந்நாவல்.
- கவிமணி