கவிஞர் ஷக்தி எழுதிய ‘மரநாய்’ கவிதை தொகுப்புக்கான அறிமுகக் கூட்டம் நேற்று மாலை (மார்ச் 31,2018) வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இலக்கிய மெரினா அமைப்பு நடத்தியது.
நிகழ்வை தமிழ் வாழ்த்தின் மூலம் தே.கோ.கவிதையாழன் தொடங்கி வைத்தார், கவிஞர் ப.இளம்பரிதி வரவேற்புரையாற்றினார். அடுத்ததாக நிகழ்விற்கு வருகை புரிந்த நூலாசிரியருக்கும், நூலாய்வு செய்வோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
மரநாய் கவிதை தொகுப்பு குறித்து கவிஞர் நிலாதரன் செறிவான உரையை வழங்கினார். நூலில் உள்ள பல கவிதைகள் பற்றி அவரின் வாழ்வனுபத்தில் எடுத்துரைத்தது மிக சிறப்பாக இருந்தது.
பின்னர் பேசிய கவிஞர் பச்சோந்தி, ஷக்தியின் கவிதைகள் குறித்து சுறுக்கமாக சொல்லி முடித்தார். ஏற்புரை வழங்கிய கவிஞர் ஷக்தி தொகுப்பில் உள்ள கவிதைகள் உருவாக காரணத்தை மிக சிறப்பாக உணர்வு பூர்வமாக விருந்தாக படைத்தார். நிகழ்வை ஒருங்கிணைத்த நா.கோகிலன் நன்றியுரை கூறினார். நிகழ்வை நா.திங்களன் தொகுத்து வழங்கினார்.