பதிவு செய்த நாள்

02 ஏப் 2018
19:31

நாடோடி இலக்கியன் எழுதிய, பார்வதி பதிப்பகத்டின் வெளியீடான ‘தனியொருத்தி’ நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1, 2018) அன்று நுங்கம்பாக்கம் கிருஷ்ணவிலாசம் உணவகத்தில் நடைபெற்றது.

புத்தக வெளியீட்டு விழாவில்
புத்தக வெளியீட்டு விழாவில்

எழுத்தாளர் ரமேஷ் வைத்யா, வெங்கடேஷ் ஆறுமுகம், நடிகர் மதன் பாப், பாத்திமா பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் துவக்கமா, ஸ்வர்ணலதா பாடிய பாடல்களை அவரது அண்ணன் மகள் ரீமா நிகழ்வில் பாடினார்.
ஸ்வர்ணலதாவின் திரையிசைப் பயணம் குறித்து எழுதப்பட்ட இந்நூலை பாத்திமா பாபு வெளியிட ஸ்வர்ணலதாவின் சககோதரி சரோஜா பெற்றுக்கொண்டார். தனியொருத்தி இ-வடிவ கிண்டில் புத்தகத்தை மதன் பாப் வெளியிட ஸ்வர்ணலதாவின் சகோதரர் ராஜசேகர் பெற்றுக்கொண்டார்.

“புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்துகளையும் மிகவும் ரசனையுடன் எழுதியிருக்கிறார் நாடோடி இலக்கியன்” என ரமேஷ் வைத்யா புத்தகம் குறித்து அறிமுக உரையாற்றினார். மேலும் வெங்கடேஷ் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்க, ஓர் இசையமைப்பாளராக ஸ்வர்ணலதாவுடன் பணியாற்றிய தன்னுடைய  அனுபவங்களை மேடையில் பகிர்ந்துகொண்டார் மதன் பாப்.

அடுத்ததாகப் பேசிய பாத்திமா பாபு புத்தகத்தில் அவருக்குப் பிடித்தமான பக்கங்களைப் படித்துக்காட்டி, ஸ்வர்ணலதாவின் பாடல்களைப் பாடி, மேற்கோள் காட்டி நிகழ்வை மேலும் சுவாரசியமாக்கினார். பதிப்பாளரான ஷான் கருப்புசாமி நிகழ்வை தொகுத்து வழங்க, நாடோடி இலக்கியன் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் பாடகி ஸ்வர்ணலதாவின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)