பதிவு செய்த நாள்

09 ஏப் 2018
11:25

 2018ம் ஆண்டிற்கான விஜயா பதிப்பகம் வாசகர் வட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் இருந்து இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் நூலகர்களை ஊக்குவிக்கும் விதமாக புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மீரா, சக்தி வை.கோவிந்தன் ஆகிய படைப்பாளர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த வருடம் எழுத்தாளர் கலாப்ரியாவுக்கு ஜெயகாந்தன் விருதும், கவிஞர் மொழிபெயர்ப்பாளர் யூமா வாசுகிக்கு கவிஞர் மீரா விருதும், கவிஞர் இசைக்கு புதுமைப்பித்தன் விருதும், சக்தி வை.கோவிந்தன் விருது விழுப்புரம் அரசு நூலகர் இராம.சுப்பிரமணியனுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யூமா வாசுகி - கலாப்ரியா - இசை
யூமா வாசுகி - கலாப்ரியா - இசை

இந்த ஆண்டு முதல் புத்த விற்பனையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு நினைவாக வானதி விருது வழங்கப்பட்ட உள்ளது. இவ்விருதினை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஈஸ்வரி புத்தக நிலையத்தின் சு.ராமுவுக்கு வழங்கப்படவுள்ளது.

ஜெயகாந்தன் விருதுக்கு ரூ.1 லட்சம், புதுமைப்பித்தன் மற்றும் மீரா விருதுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், சக்தி வை.கோவிந்தன் மற்றும் வானதி விருதுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும் பரிசு வழங்கப்பட இருக்கிறது. உலக புத்தக நாளான ஏப்ரல் 23ம் தேதி விருது வழங்கும் விழா கோவை பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் நடைபெற இருக்கிறது.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)