பதிவு செய்த நாள்

17 ஏப் 2018
12:49

 1917ம் வருடத்தில் இருந்து அமெரிக்காவில் புலிட்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது. செய்தித்தாள், வார இதழ், இணையதள ஊடகம், இலக்கியம் மற்று இசை ஆகிய துறைகளில் இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

விருது பெற்ற படைப்புகள்
விருது பெற்ற படைப்புகள்

2018ம் வருடத்திற்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாவலாசிரியர் ஆண்ட்ரூ சீன் கிரேரின் ‘Less' என்கிற நாவலுக்கு இந்த வருடத்திற்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நடுத்தர வயதுடைய நாவலாசிரியரைப் பற்றிய காமிக் கதையே இந்நாவல்.

நாடகப் பிரிவில் மார்ட்டினா மஜோக்கின் ‘Cost Of Living’ நாடகத்திற்கும், சுயசரிதை அல்லது வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகளுக்கான பிரிவில் லாரா இங்காஸ் வைல்டர் குறித்து கரோலி ஃப்ராசர் எழுதிய ‘ப்ரேரி ஃபியர்ஸ்’ என்ற புத்தகத்திற்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கட்டுரைத் தொகுப்பிற்கான பொதுப் பிரிவில், ஜேம்ஸ் ஃபோர்மேனின் “Locking Up Our Own- Crime and Punishment in Black America” என்கிற கட்டுரைத் தொகுப்பிற்கும், ஜேக் - இ - டேவிஸின் “The Gulf” வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பிற்கான பிரிவில் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதைக்கான பிரிவில், பிராங்க் பிடார்ட்டின் “ Half-Light” தொகுப்பிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)