பதிவு செய்த நாள்

23 ஏப் 2018
17:59

   நான் ஒரு சாதாரண பெண். அப்படி தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு சராசரியான சாதாரண பெண் என்பவள் அவள் வாழ்க்கையை வாழுபவள். எந்த முட்டாள்தனத்திற்கும் வளைந்து குடுக்காதவள். புரட்சி பெண் இல்லையாயினும், அவளின் வாழ்க்கையில் அவள் தைரியமாக முடிவெடுப்பதை பார்த்து மற்ற பெண்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவாள்.

அன்று தான் எனக்கு தெரிந்தது நான் ஒரு சராசரிப் பெண்ணிற்கும் கீழ், ஒரு சுதந்திரம் அடைந்த அடிமையாய் இருக்கிறேன் என்று. ஆமாம் சுதந்திர அடிமை என்று தான் சொல்லிக்கொள்ள முடியும். நான் என் வாழ்க்கையை வாழ்ந்து கொள்ள முழு சுதந்திரம் இருக்கிறது. சில பல கட்டுப்பாடுகளை  தவிர்த்து. அவைகளை தகர்க்காமல், அந்த சுயநல தர்மங்களை ஏற்றுக்கொண்டு ஒரு அடிமை வாழ்க்கையை தான் இங்கு நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு தனி சான்று தேவையில்லை, நம் மனசாட்சிகளே போதும்.

அப்படி எனக்கு சிறு வயதில் இருந்து காரணங்கள் அற்று கற்பிக்கப்பட்ட காதல், திருமணம், கற்பு, உறவு முறைகள், ஆணுக்கு அடங்கி போகவேண்டிய நிர்பந்தம் அனைத்தையும் உடைத்து தகர்த்துவிட்டு எனக்கான சுயமரியாதை, எனக்கான வாழ்க்கை, என் துணையை தேர்ந்தேடுப்பதற்கான உரிமை, என் சொத்துரிமை, சமூகத்தில் என்னால், ஒவ்வொரு பெண்ணாலும் முடிந்த, அவளின் வீட்டில் ஆரம்பிடிக்க வேண்டிய சாதிய கட்டமைப்பை எப்படி உடைப்பது போன்ற விஷயங்களை காரணங்களோடு ‘பெண் ஏன் அடிமையானாள்’ விளக்குகிறது!

ஒரு பெண் கேள்வி கேட்க கூட வாய்ப்பில்லை, ஆனால் நம் மனதிற்குள் கேட்கப்படும் அத்தனை கேள்விகளுக்கும் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தில் பதில் உண்டு. உங்கள் மாற்றத்திற்கு ஒரு காரணமாக இந்தப் புத்தகம் நிச்சயம் இருக்கும் ! பெரியாரின் வாசிப்புகளில் பெண்களுக்கு இதுவே முதன்மையான தேர்வு!
- சாராவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)