பதிவு செய்த நாள்

24 ஏப் 2018
16:31

ருடம்தோறும் சுஜாதா அறக்கட்டளை மற்றும் உயிர்மை பதிப்பகம் சுஜாதா இலக்கிய விருது வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான (2018) சுஜாதா விருதினை அறிவித்திருக்கிறா கவிஞர் மனுஷ்ய புத்திரன்.

வழக்கமான அறிவிப்பாக இல்லாம, ஒரு புது முயற்சியாக முகநூல் நேரலையில் இவ்விருதுகள் குறித்த அறிவிப்பைச் சொன்னார் மனுஷ்ய புத்திரன். கூடவே விருதுபெற்ற இருக்கிற எழுத்தாளர்களை அலைபேசியில் அழைத்து நேரலையிலேயே அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவரவர்களது படைப்புகள் குறித்து கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

விருது பெற இருக்கும் புத்தகங்கள் :

இணைய விருது :

தொடர்ந்து முகநூலில் எழுதிவரும் ஸ்ரீதர் சுப்பிரமணியம் மற்றும் மது ஸ்ரீதரன் ஆகியோருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டது. இவ்விருது தேர்வுக்குழுவில் பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா, எழுத்தாளர்கள் சரவண கார்த்திகேயன் மற்றும் ஷான் கருப்புசாமி ஆகியோர் பங்குபெற்றிருந்தனர்.

நாவல் பிரிவு :

தமிழ் பிரபாவின் ‘பேட்டை’ மற்றும் சைலபதியின் ‘பெயல்’ ஆகிய நாவல்களுக்கு சுஜாதா நாவல் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்விருது தேர்வுக்குழுவில், எழுத்தாளர்கள் பாவண்ணன், இமயம் மற்றும் நா.முருகேச பாண்டியன் ஆகியோர் பங்குபெற்றிருந்தனர்.

உரைநடை இலக்கியப் பிரிவு :

எழுத்தாளர் ராஜ் கௌதமனின் ‘சுந்தரராமசாமி கருத்தும் கலையும்’ மற்றும் எச்.பீர் முகமதுவின் ‘எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும்’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளுக்கு கட்டுரைப் பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுகதைப் பிரிவு :

சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்காக ஜீ.முருகனின் ‘கண்ணாடி’ சிறுகதை தொகுப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது தேர்வுக் குழுவில் கவிஞர் சமயவேல், எழுத்தாளர்கள் சுரேஷ்குமார் இந்திரஜித் மற்றும் இரா.முருகன் ஆகியோர் பங்குபெற்றனர்.

சிற்றிதழ் பிரிவு :

இடைவெளி சிற்றிதழுக்கு சிறந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது தேர்வுக் குழுவில் பத்திரிகையாளர்கள் தமிழ்மகன், கே.என்.சிவராமன் மற்றும் மனோஜ் ஆகியோர் பங்குபெற்றிருந்தனர்.

கவிதைப் பிரிவு :

தேன்மொழி தாஸின் ‘காயா’ மற்றும் ஸ்ரீ சங்கரின் ‘திருமார்புவள்ளி’ ஆகிய கவிதை தொகுப்புகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது தேர்வுக்குழுவில் கவிஞர்கள் கலாப்ரியா, சுகுமாரன் மற்றும் இந்திரன் ஆகியோர் பங்குபெற்றனர்.

அறிவிக்கப்பட்ட விருதுகள் மே 3ம் தேதி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)