தலைப்பு | : | மறைக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள் |
ஆசிரியர் | : | பேராசிரியர் சோ.மோகனா |
பதிப்பகம் | : | தமிழ்நாடு அறிவியல் இயக்கம் |
விலை | : | 40/- |
இந்தப் புத்தகம் 64 பக்கங்களுடைய சின்ன நூல்தான் என்றாலும் இதன் பேசுபொருள் மிகவும் கவனிக்கத்தக்கது. ஒன்பதாம் வகுப்பும் அதற்கு மேலே படிப்பவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக எழுதப்பட்ட நூல். ஆசிரியர்களும் படிக்கவேண்டிய நூல் இது.
நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமனை நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவர் பெண்கல்விக்கு எதிரானவராக இருந்திருக்கிறார் என்பதை அறியும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆம். கமலா என்பவரை அறிவியலாளராகச் சேர்ந்துபடிக்க ராமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் விடாப்பிடியாகப் போராட்டம் செய்து, ஆய்வகத்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் கமலா. இவர் மட்டுமல்ல.. உலகம் முழுவதுமே பெண்கள் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டனர் என்பதைச் சொல்கிறது இந்த நூல். கல்வி மறுக்கப்பட்டவர்களின் கதைகள் மட்டுமல்ல, பெரிய சாதனைகள் புரிந்தும், வெளி உலகினருக்குத் தெரியாமல் போன பெண்கள் பற்றியும் இந்நூல் பேசுகிறது. பொருத்தமான படங்களும் இருப்பது சிறப்பு. மொழிநடை இன்னும் எளிமையாக்கி இருந்தால் மிகச்சிறப்பான நூலாக வந்திருக்கும்.
நூலினைப் பெற:
அறிவியல் வெளியீடு,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை-600086
தொலைப்பேசி 044-28113630