தலைப்பு : சுற்றுச்சூழல் அறிஞர்களின்...
ஆசிரியர் : ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
விலை : 50/-

பதிவு செய்த நாள்

28 ஏப் 2018
15:47

  உலகம் முழுவதிலும் இன்று பேசப்படும் முக்கியமான விஷயம் சூழலியல். மனிதகுலம் வளர, வளர நீர் நிலைகள், காடுகள், மண் வளம் என எல்லாவற்றிலும் தங்களது ஆதிக்கதைச் செலுத்தத்தொடங்கியது. குற்ற உணர்வு இல்லாமல் இயற்கையைச் சுரண்டத்தொடங்கிவிட்டது. இயற்கை அழிந்தால், மனிதனும் அழிவான் என்பது தெரிந்திருந்தாலும், மாற்றுவழிகளில் வாழ்ந்துகொள்ளமுடியும் என்ற மூடநம்பிக்கையினால், அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறோம்.

அதனால்தான் இயற்கையின் பேரழிவை தடுக்கத்தெரியாமல் பல உயிர்களை இழந்துகொண்டு வருகிறோம். இப்படியானச் சூழலில் தான் சுற்றுச்சூழல் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகத்தான பணியை பலர் செய்து வருகின்றனர். அப்படி உலகம் முழுவதிலும் செயல்பட்ட/ செயல்பட்டுவரும் அறிஞர்களின் பிறந்த ஊர், எத்துறையில் அவர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதுபோன்ற செய்திகளுடன் 35 பேரின் எளிய அறிமுகத்தை இந்நூலில் நூலாசிரியர் கொடுத்துள்ளார்.

இந்நூலில் எனக்கு முக்கியமாகப்பட்டது என்னவெனில், வெளிநாட்டு அறிஞர்களின் பெயர்களை தமிழில் கொடுத்திருப்பதோடு, அவர்களின் ஆங்கிலப்பெயரையும் அடைப்புக்குறிக்குள் கொடுத்திருப்பது மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பிட்ட அறிஞரைப் பற்றி மேலும் நாம் அறிந்துகொள்ள விரும்பினால், ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயரைக்கொண்டு, இணையத்தில் தேடிக்கொள்ளலாம். சூழலியலில் ஆர்வமுடையவர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல்.

நூலினைப் பெற:
அறிவியல் வெளியீடு,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை-600086
தொலைப்பேசி 044-28113630.

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)