பதிவு செய்த நாள்

28 ஏப் 2018
16:25

 குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழான துளிரில் விஞ்ஞானி வீராச்சாமி தொடர் மிகவும் பிரபலம். சரி யார் இந்த விஞ்ஞானி வீராச்சாமி? தென் தமிழகத்தின் பின் தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்தவர். நன்றாகப் படித்து மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று பல்வேறு நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சிக்கூடங்களில் வேலைபார்த்தவர். விருப்ப ஓய்வின் பேரில் வேலையை விட்டுவிட்டு, இப்போது தன்னுடைய பண்ணை வீட்டை ஆய்வுக்கூடமாக மாற்றிக்கொண்டு அங்கேயே ஆய்வுப்பணிகளைத் தொடர்கிறார்.

ஓய்வு நேரங்களில் மாணவர்களை சந்திப்பதும் அவர்களது சந்தேகங்களை தீர்ப்பதும் இவரது முக்கியமான பொழுதுபோக்கு. இவர் மாணவர்களை சந்திப்பதும் அங்கே நிகழும் உரையாடலுமாக நிறைய அறிவியல் விஷயங்களை பகிரும்படியாக இப்பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. அதே பாத்திரத்தினைக்கொண்டு அடுத்த அறிவியல் புனைகதைகள் தொடரை புதியதாக தந்திருக்கிறார் ஜி.சரண்.

தொடர் புத்தகமாக வந்திருக்கும் இந்த அறிவியல் புனைகதைகளில் காட்டில் இருந்து வீட்டுக்கு - விலங்குகள் பாகம்-1, பாகம்-2 மற்றும் காட்டில் இருந்து வீட்டுக்கு - பறவைகள் பாகம்-1 ஆகியவை தற்போது வெளிவந்துள்ளன.

இன்று இங்கே நாம் பார்க்கும் விலங்குகளும் பறவைகளும் ஒரு காலத்தில் காட்டுக்குள் தான் (நாமும் கூட) இருந்தன. அவை எப்போது, எப்படி மனிதனோடு இணக்கமாக வாழத்தொடங்கின, அதன் பின்னணி என்ன? மனிதகுல ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்? நரிக்கும் நாய்க்கும் இருக்கும் தொடர்பு என்ன? என்பது போன்ற செய்திகளை இதில் சுவைபட வீராச்சாமி விளக்குகிறார். சின்னச்சின்ன புத்தகமாக இருப்பதால் வாசிக்க எளிமையாக இருக்கிறது. கதைகளின் ஊடே இருக்கும் படங்கள் வாசிப்புக்கு இன்னும் பலம் சேர்க்கின்றன. இந்த மூன்று நூல்கள் தலா ரூ. 30/- விலையில் கிடைக்கின்றன.

நூல்களைப் பெற, தொடர்புக்கு : 044 24332424வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)