பதிவு செய்த நாள்

09 மே 2018
12:08

 ட்டிமன்றம் நடுவர் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவாளர் என மக்களைத் தன் பேச்சின் ஊடாகக் கட்டிப் போட்டவர் பேராசிரியர் அறிவொளி. இவரின் ஜோடனைகள் இல்லாத தெள்ளத் தெளிவான தமிழ்ப் பேச்சு மக்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

நாகை அருகே உள்ள சிக்கல் என்கிற ஊர் தான் இவரது பூர்வீகம்.  ஆனால் வளர்ந்து வாழ்ந்தது எல்லாம் திருச்சியில் தான். டென்மார்க் தலைநகர் கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தைக் கொண்டு சென்ற இவர், புற்றுநோய்க்கு தமிழ் மருத்துவத்திலும் தீர்வு கூறியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பூம்புகார்  கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இதுவரைக்கும் 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தி, அதனை செயல்படுத்தும் முறைகளையும் வகுத்தார். திருக்கோயில்கள் வரிசைகள் என்ற தலைப்பில் தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள், பஞ்சபூத தலங்களுக்கு நேரில் சென்று அதன் வரலாறுகளையும் சிறப்புகளையும் ஆய்வு செய்திருக்கிறார். தனது கடைசி காலம் வரைக்கும் தமிழுக்குத் தொண்டாற்றிய பேராசிரிய அறிவொளி, உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு (மே-8) காலமானார்.

இவரது இறப்பு குறித்து எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் “தனக்கென்று ஒரு தனிப் பாணியை அமைத்துக் கொண்டு பேசிவந்தவர் சொற்பொழிவாளர் அறிவொளி. அவருடன் நட்புறவு கொண்டு பழகக் கிடைத்த பாக்கியம் என்னுடையது. ஸ்ரீவித்யா உபாசகர். ஓயாமல் மந்திர ஜபம் செய்பவர். மிகச் சிறந்த எழுத்தாளரும் கூட. அமுதசுரபியைத் தம் சிறுகதைகளாலும் கட்டுரைகளாலும் அலங்கரித்தவர். பேராசிரியர் ராதாகிருஷ்ணன் பரம்பரையின் ஒரு முக்கியமான விழுது விழுந்துவிட்டது. அன்பு மயமான ஓர் அரிய ஆன்மிக அறிஞரைத் தமிழுலகம் இழந்துவிட்டது.” இரங்கல் தெரிவித்துள்ளார்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)