பதிவு செய்த நாள்

12 மே 2018
13:09

 * தமிழில் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி. (வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி)

* பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பிறந்ததால், (1901-ம் ஆண்டு, டிசம்பர் 1) பள்ளிக்கூடம் போகவில்லை.

* அந்தக் கால வழக்கப்படி, அவருக்குப் பால்ய திருமணம் செய்யப்பட்டது. ஐந்து வயதிலேயே திருமணம் ஆனது.

* திருமணத்திற்குப் பிறகு எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார். குழந்தைகளுக்கு கதைகள் சொல்லத் தொடங்கி, பிறகு எழுத்துலகிலும் கால் பதித்தார்.

வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி
வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி

* இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர். மேடைப் பேச்சாளர், நாவலாசிரியர், சமூகநல ஊழியர், பத்திரிகை ஆசிரியர், பாடகி என பன்முகம் அவருக்கு.

* பெண்கள் படிப்பதே அரிதாக இருந்த காலத்தில், 'ஜகன்மோகினி' என்ற பத்திரிகையை நடத்தினார்.

* 1925இல் இருந்து 'ஜகன்மோகினி' இவரின் பொறுப்பில் வரத்தொடங்கியது. அதில் இவரது நாவல்கள் தொடர்ந்து வந்தன.

* பலரும் இவர் பத்திரிகை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜகன்மோகினியை வாங்கி தீயிட்டுக் கொளுத்தினர்.

* பெண் விடுதலை, தேசபக்தி, விதவைத் திருமணம் போன்றவை இவர் கதைகளின் கருவாக இருந்தன.

* சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு வேலூர் சிறையில் இருந்தபோதும், இவர் தன் எழுத்துப் பணியை விடவில்லை.

* சிறையில் இருந்த கைதிகளின் கதையைக் கேட்டு நாவலாக எழுதினார். அந்த நாவல்தான், 'சோதனையின் கொடுமை.'

* இவரின் நாவல்கள் சில திரைப்படங்களாக எடுக்கப்பட்டன.

* துப்பறியும் நாவல் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளரும் இவர்தான்.

* இவர் எழுதிய முதல் நாடக நூல், 'இந்திர மோகனா' 1924-இல் வெளிவந்தது.

* நாவல் ராணி என்று போற்றப்பட்ட கோதைநாயகி, 1960இல் காலமானார்.

கோதைநாயகி எழுதிய 'காலச் சக்கரம்' சிறுகதையின் சிறுபகுதி இங்கே:

“கயிற்றுக் கட்டிலில் வாடித் துவண்டு, தளர்ந்த தேகமும் குழி விழுந்த கண்களும் எண்ணெயை அறியாத, காற்றில் பறக்கும் தலை முடியும், கண்ணிலிருந்து நீர் பெருக்கிக் கன்னத்தின் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் பரிதாபகரமான தோற்றத்துடன் சோகப் பதுமையோ அல்லது உயிருள்ள பாவையோ என்று ஐயுறும் அளவுக்கு இளநங்கையான சுபாஷிணி படுத்தவாறு கீழ்த்திசையில் தோன்றும் சந்திரனை பார்த்துக் கொண்டிருந்தாள்.”வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)