பதிவு செய்த நாள்

22 ஜூலை 2017
16:22

ஜுலை 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவிருக்கும் சென்னை புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது. இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்

துவங்கி வைத்தபோது
துவங்கி வைத்தபோது

நடைபெறும் இத்திருவிழாவில் மொத்தம் 252 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 21ம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் புத்தகத் திருவிழாவைத் துவங்கி வைத்தார்.

அன்று மாலை 6 மணிக்கு விழா அரங்கில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி விருதுகள் வழங்கினார். அருணோதயம் அருணன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் இரா.முத்துக்குமாரசாமி, ஸ்ரீ இந்து பப்ளிகேஷனின் வி.கரு.ராமநாதன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் மருத்துவ நூல் சாதனையாளர் என்ற சிறப்பு விருதினை மருத்துவர் முத்துச் செல்லக்குமாருக்கு வழங்கப்பட்டது. 
துவக்க நாளா நேற்று வாசகர்களின் வருகை குறைவாகவே இருந்தது. இதுகுறித்து பேசிய பதிப்பாளர் “வார இறுதி நாட்களில் மட்டுமே கூட்டம் வர வாய்ப்பிருக்கிறது. இந்த வார இறுதி மற்றும் அதன் தொடர்ச்சியாக வருகிற வாரத்திலும் அதிகமான வாசகர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம்” என்று கூறினார்.

வாசகர்கள்
வாசகர்கள்

புத்தகத் திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் புத்தக அரங்குகள் திறந்திருக்கும். 

22ம் தேதியான இன்று வாசிப்பை நேசிப்போம் என்கிற தலைப்பில் பி.மணிகண்டன் என்பவரும், நிற்க அதற்குத் தக என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலாவும் விழா அரங்கில் பேசுகிறார்கள்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)