பதிவு செய்த நாள்

15 மே 2018
13:48

மிழ் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளரார் பாலகுமாரன். தஞ்சாவூர் மாவட்டம் பழமார்நேரி கிராமத்தில் பிறந்தவர். 1969ல் இருந்து கவிதைகள் கட்டுரைகள் என எழுதத் தொடங்கியவர் பிற்காலத்தில் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளராக ஆளுமை செய்தார்.

இவருடைய இரும்பு குதிரைகள், அகல்யா, கங்கை கொண்ட சோழன் போன்ற பல்வேறு வரலாறு மற்றும் புனைவுக் கதைகளை எழுதியிருக்கிறார் பாலகுமாரன். அவர் எழுதிய உடையார் நாவல், பிற்கால சோழர்கள் பற்றிய வரலாற்றை சமகால தமிழ்ச் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட வரலாற்றுக் கொடை என்றே சொல்லலாம். ஆறு பாகங்களும் 25000 பக்கங்களும் கொண்ட இந்நாவல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

ஆன்மிக கதைகள், கட்டுரைகள் மற்றும் உளவியல் சார்ந்த பல்வேறு படைப்புகளை தமிழுக்கு கொடுத்திருக்கிறார். காதலாகிக் கனிந்து, ஞாபகச் சிமிழ், சூரியனோடு சில நாட்கள், அந்த ஏழு நாட்கள் ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும், சின்ன சின்ன வட்டங்கள், சுகஜீவனம், கடற்பாலம் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், விட்டில் பூச்சிகள் என்கிற கவிதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். மேலும், குணா, நாயகன், ஜெண்டில் மேன், ஜீன்ஸ், மன்மதன், புதுப்பேட்டை என பல்வேறு தமிழ் திரைப்படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியிருக்கிறார்.

தொடர்ந்து எழுத்துலகில் இயங்கி வந்த பாலகுமாரன் சமீப காலமாக உடல்நலக்குறைவால் ஓய்வில் இருந்தார். நேற்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று (மே 5, 2018),  நண்பகல் கலாமானார்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)