பதிவு செய்த நாள்

30 மே 2018
17:44

‘‘ஒரு நாடு.. கல்வி, தொழில், சமுதாயம், கட்டமைப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெறுகிறதோ அதுதான் உண்மையான சுதந்திரம். சமதர்ம சமுதாயம் என்பது எல்லாக் கோணங்களிலும் தனித்தன்மை உடைய ஒரு நாட்டை உருவாக்குவதே ஆகும்.

எந்த ஒரு நாட்டில் சிறு, குறு விவசாயிகள் அதிக அளவில் உள்ளார்களோ அந்த நாடு வசதி படைத்த நாடு. அதே சமயம் எந்த ஒரு நாட்டில் பெருநிலக் கிழார்கள்-ஏராளமாக இருக்கிறார்களோ அந்த நாடு வறுமையின் பிடியில் சிக்கியுள்ள நாடு. இதைப் புரிந்து இன்றும் செயல்பட்டால் உலகில் வறுமை ஒழியும், இல்லாமை இல்லாமல் போகும்; வாழ்வு சிறக்கும் வளம் கூடும்.’’

இதுதான் புரட்சியாளர் ஹொசே மார்த்தியின் ‘கியூபா சுதந்திரம்’ குறித்த கருத்து. சேகுவேரா பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஹொசே மார்த்தி. பெரும் அறிவு ஜீவியாகவும், ஆயுதம் தாங்கிய புரட்சியாளராகவும் களத்திலேயே தன் உயிரை நாட்டுக்காக கொடுத்தவர். தனது 16 வயதில் தொடங்கிய இந்த விடுதலை வேட்கையால், அயராது உழைத்து & கடைசியில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டார். இதோ அந்தப் புரட்சியானைப் பற்றிய சில வரலாற்றுப் பார்வைகள்.

துப்பாக்கியால் புரட்சி செய்துவிடலாம். ஆனால், தனது பேச்சுக்களாலும் எழுத்துக்கலாலும் கியூபா மக்களை எழுட்சிக்கொள்ள செய்தவர். இந்த சுதந்திர தாகம் சிறு வயதில் இருந்தே அவருடைய மனதில் ஆழப் பதிந்து இருந்தது.

கியூபாவில் உள்ள ஹவானாவில் 1853ம் ஆண்டு ஜனவரி 28ல் பிறந்தார். இவரது பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் அவரது விருப்பதிற்கு ஏற்றதுபோல வரை வளர்த்தனர். 1856ல் ஹவானாவில் உள்ள தொடக்கப்பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார் மார்த்தி. பிறகு அவருக்கு ஓவியக் கலையில் ஆர்வம் இருந்ததால், ஓவியப் பள்ளியில் சேர்ந்தார். அதன்பிறகு கவிதை எழுதுவதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். கியூபாவில் இருந்த புகழ்பெற்ற எல் ஆல்பம் நாளிதழில் அவருடைய கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவந்தன.

அந்த சமயத்தில் '10 ஆண்டு' போர் கியூபாவில் ஏற்பட்டது. ஸ்பெயின் காலணிய ஆதிக்கத்திற்கு கீழ் அடிமை அரசாக இருந்த கியூப அரசை எதிர்த்து போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. அதற்கு ஆதரவாக மார்த்தியும் கலந்துகொண்டார். இவருடைய கவிதைகளும் கட்டுரைகளும் கியூப விடுதலையை தூண்டுவதாகவே இருந்தது.

இவருடன் அன்டோனியோ மாசியோ, மேக்சிமோ கோமேஸ் ஆகிய நண்பர்களும் இணைந்துகொண்டனர். புரட்சிக் கவிதைகளும், கியூப அரசுக்கு எதிரான தலையங்கம் எழுதி தனது பதினாறு வயதிலேயே கியூபாவில் இருந்து ஸ்பெயினுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு சென்ற பிறகும் அரசின் அடக்குமுறையைக் கண்டு துவண்டு விடாமல், மனித உரிமைகள் துறையில் சட்டம் பயின்றார். அதன் பிறகு தத்துவம், சட்டம், இலக்கியம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்று தன்னை ஒரு பெரும் அறிவளியாக வளர்த்துக்கொண்டதுடன் நின்றுவிடாமல், தனது அறிவை நாட்டு விடுதலைக்காக பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினார்.

அதன் விளைவாக ஸ்பெயினில் இருந்து வெளியேறி பிரான்சு நாட்டிற்குச் சென்றார். அங்கு, கியூபாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களை சந்தித்து, தனது நாட்டு விடுதலைக்கு வழிவகுத்தார். பிறகு மெக்சிகோ, நியூயார் என்று பல நகரங்களை சுற்றி வந்த மார்த்தி 1875ல் மெக்சிகோவில், மார்த்தி எழுதிய ‘லவ் இஸ் ரீபெயிடு பை லவ்’ என்ற நாடகம் பெரும் வெற்றியைத் தந்தது.

அதன்பிறகு கவுதமாலாவில் தத்துவப் பேராசிரியராக சில காலம் பணிபுரிந்தார். தொடர்ந்து அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் சென்ற மார்த்தி, அங்கிருந்த கியூப குடிகளிடம், தமது நாட்டின் விடுதலையின் தேவையைப் பற்றி உரையாற்றினார். மத்திய அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் என பல இடங்களுக்கும் நீண்ட இந்த பயணத்தில் திரட்டப் பட்ட நிதி, கியூப புரட்சிக் குழுவின் தேவைகளுக்கு பெரிதும் பயன்பட்டது.

அதே நேரத்தில் 1894ல் இவர் பாட்ரியா நாளிதழில் எழுதிய ‘எ கியூபா’ என்ற கட்டுரை அமெரிக்க மற்றும் ஸ்பெயின் அரசுகளுக்கு இடையே இருந்த ரகசிய உறவை அம்பலப்படுத்தியது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய குழு ஒன்றை தயார் செய்யும் வேலைகளை மார்த்தி தொடங்கினார்.,
1895ல் மார்த்தியால் முன்னெடுக்கப்பட்ட புரட்சிப்படை சில காரணங்களால் பின்னடைவை சந்தித்தது. பிறகு நிதானமாக யோசித்து, ஆரம்பத்தில் தன்னுடன் இருந்த மேக்சிமோ கோமேசின் படைகளுடன் சேர்ந்து போரிடலாம் என்று முடிவு செய்தார். மார்த்தியின் அழைப்பை ஏற்ற கோமாசோடு அவரின் படையனி, 1895ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் மவுன்டே கிரிஸ்டி நரில் இருந்து புறப்பட்டது. அதே மாதம் 11ம் தேதி கியூபாவின் மைசி கபேயை அடைந்த படை, அங்கிருந்த உள்ளூர் புரட்சிப் படையுன் கூட்டு சேர்ந்து கொண்டது.

இந்தக் கூட்டுப் படை ஸ்பெயின் படையுடன் ஒப்பிடும்போது மிகச் சிறியதே. இருப்பினும் எதற்கும் அஞ்சாமல், ஸ்பெயின் படையினை எதிர்த்துப் போரிட்டது. சில நாட்களிலேயே ஸ்பெயின் படையினை எதிர்கொள்ள முடியாத மார்த்தியின் கூட்டுப்படை சிக்கல்களை சந்தித்தது. கடைசியில் 1895, மே 19ம் தேதி ஸ்பெயின் படையினால் ஜோஸ் மார்த்தி கொல்லப்பட்டார். இவரது புரட்சி கவிதைகள் தான் பின்னர் கியூப விடுதலை அடைவதற்கு தூண்டுகோளாக இருந்தது.

- கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)