பதிவு செய்த நாள்

22 ஜூலை 2017
18:00

இயற்பெயர் : தியாகராஜன்பிறப்பு: செப்டம்பர் 22, 1931

இறப்பு : மார்ச் 23, 2017

பிறந்த ஊர்: செகந்திராபாத்

வசித்த ஊர் : சென்னை

எழுத்தாளர் அசோகமித்ரன்
எழுத்தாளர் அசோகமித்ரன்

குறிப்பு: தனது 21ம் வயதில் சென்னைக்கு குடிபெயர்ந்த அசோகமித்ரன் தமிழின் மீது ஏற்பட்ட காதலால் எழுத்துலகில் கால்தடம் பதித்தார். பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், இன்று, ஆகாசத்தாமரை, ஒற்றன், மானசரோவர் போன்ற நாவல்களை எழுதியுள்ளார். மேலும் நாடகத்தின் முடிவு, வாழ்விலே ஒருமுறை, விமோசனம் விடுதலை,காலமும் ஐந்து,குழந்தைகளும், முறைப்பெண், சினேகிதர் போன்ற நிறைய சிறுகதைகளும் குறுநாவல்களும் எழுதியிருக்கிறார்.

இவர் எழுதிய ‘அப்பாவின் சிநேகிதர்’ சிறுகதை தொகுப்புக்காக 1996ல் சாகித்திய அகாடமி விருது பெற்றார். “எழுத ஆரம்பிச்சு 21 வருசம் கழிச்சுதான் வாசகர்களிடம் அறியப்பட்டேன்” எந்த விரக்தியும் இல்லாமல் சிரித்துக்கொண்டே சொல்வார். நகைச்சுவை கலந்த இவருடைய எழுத்துகள் தமிழ் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.  அசோகமித்ரன் தனது 86ம் வயதில் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)