பதிவு செய்த நாள்

04 ஜூன் 2018
12:51

 


ள்பனியனில் இருக்கும்
வீரத்தின் முகங்களோடு
பள்ளிகளில் குதறிக் கொள்கிறோம்
கைமணிக்கட்டில் இருக்கும்
வீரத்தின் கயிறுகளோடு
திருவிழாக்களில் குதறிக் கொள்கிறோம்
வீட்டில் தொங்கும் வீரத்தின்
படங்களோடு ஊர்களில் 
குதறிக் கொள்கிறோம்

மாறி மாறி விழுந்து
குரல்வளைகளைக்
குதறுகையில்தான் அவர்கள்
நமது கால்களில் விலங்கினை
மாட்டத் தொடங்கினார்கள்

விலங்கின் இறுகிய பிடியில்
இக்கனம் வரை நாம் எல்லோருமே
அடிமை என்பதை மறந்து
அடிக்கடி குதறிக் கொள்கிறோம்

பிடியை வைத்திருப்பவர்களிடம்
நமது வீர முகங்களும்
வீரக்கயிறுகளும்
வீர படங்களும் 
ஒருபோதும் வேலைக்காகாது

உடலில் எந்த இடத்தில் சுட்டால்
எப்படி உள்ளிறங்கும் என்று அவர்கள்
நமக்கான தோட்டாக்களைக்
குறி பார்க்கையில்

குரல்வளைகள் கடிக்க காரணங்கள்
கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம்

- முத்துராசா குமார்
நிழற்படம் : ஸ்ரீதர் பாலசுப்ரமணியம்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)