பதிவு செய்த நாள்

04 ஜூன் 2018
16:06

டில்லி டி.ஏ.வி. பள்ளியில் படிக்கும் நிஹரிகா, பள்ளி விடுமுறையில் தாத்தா வீட்டிற்குச் சென்றார். தாத்தா சொன்ன கதைகள் அவருக்கு உற்சாகம் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் தானே கதை சொல்லத் தொடங்கினார். அவரை எல்லோரும் பாராட்டினர். தன் மனத்தில் தோன்றிய ஒரு கதையை ஒன்றரை மாதத்தில் நாவலாக எழுதி முடித்தார் நிஹரிகா.

எழுத்தாளர் நிஹாரிகா சோப்ரா
எழுத்தாளர் நிஹாரிகா சோப்ரா

அரசர் ஒருவருக்கு ரோஸ் பிங்க் என்றொரு மகள் இருக்கிறாள். தாயை இழந்த அவள் மீது அரசர் மிகவும் பாசமாக இருக்கிறார். அதிசயமான நெக்லஸ் ஒன்றை அணிந்தபடி எப்போதும் தோட்டத்தில் விளையாடுவதுதான் இளவரசியின் பொழுதுபோக்கு. திடீரென ஒருநாள் அந்த நெக்லஸ் காணாமல் போகிறது. அதைத் தேடிச் செல்லும் இளவரசி என்ன மாதிரியான அனுபவங்களை அடைகிறாள் என்பதுதான் கதை.

ஒன்பது வயதான நிஹரிகா 'ரகசிய பிங்க் ரோஸ்' (The Secret Pink Rose) என்ற புத்தகத்தை எழுதியதன் மூலம், இந்தியாவின் இளம் வயது நாவலாசிரியராக அறியப்படுகிறார். 13 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவல், கடந்த அக்டோபரில் வெளியாகி, சிறுவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மற்றொரு நாவலையும் எழுத திட்டமிட்டுள்ளார் நிஹரிகா.

கதை எழுதுவதும், பாடம் படிப்பதும் இரு வேறு வேலைகள் என்று கூறும் அவர், பள்ளியில் முதல்தர மாணவியாக இருக்கிறார். நாடகங்களில் நடிப்பதுதான் அவரது விருப்பம். இப்போது அவரது நாவல் அடைந்துள்ள வெற்றியைத் தொடர்ந்து, முழுநேர எழுத்தாளராக ஆவதையே விரும்புவதாகச் சொல்கிறார்.

- ஜி.சரண்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)