பதிவு செய்த நாள்

23 ஜூலை 2017
22:18

சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், www.noolveli.com இணையதளம் துவக்கிவைக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்திற்காக தனித்துவத்தோடு, டிஜிட்டல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள நூல்வெளி.காம் இணையதளத்தை  மனிதவள நிபுணர் - எழுத்தாளர் ஆர்.கார்த்திகேயன் துவங்கிவைத்துப் பேசினார்.

நூல்வெளி.காம்-ஐ துவக்கி வைத்தபோது
நூல்வெளி.காம்-ஐ துவக்கி வைத்தபோது

அப்போது “நூல்வெளி என்கிற அழகான பெயரில் இணையதளத்தை துவங்கியிருக்கிறார்கள். இதில் இலக்கிய ஆளுமைகளின் பேட்டி, நூல் அறிமுகம் போன்ற நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இலக்கியத்திற்காக நேரம் ஒதுக்கீடு மிகவும் குறைந்துவிட்ட காலத்தில், அதனை காட்சி வடிவத்தில் கொடுத்திருக்கிறார்கள். நம்முடன் இருந்த, இருக்கிற ஆளுமைகளுடைய காட்சிப் பதிவுகளை அருமையாக செய்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல முயற்சி.” எனத் தெரிவித்தார்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)