தலைப்பு : செவ்விந்தியக் கழுகு
ஆசிரியர் : தமிழில்: சரவணன் பார்த்தசாரதி
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை : 40/-

பதிவு செய்த நாள்

17 ஜூன் 2018
12:06

பாரதி புத்தகாலயம் தொடர்ந்து வெளியிட்டு வரும் சிறார் புத்தக வரிசையில் புதுமையாக வெளிவந்துள்ளது ‘செவ்விந்தியக் கழுகு’ மொழியாக்க நூல். ‘எல்லாம் வல்லது இயற்கை! எல்லோர்க்கும் அவள்தான் அன்னை’ என மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவினை விளக்கும் செவ்விந்தியர்களின் வாய்மொழிகதைகள் அடங்கிய மொழியாக்கமே இச்சிறிய நூல்.

குற்றவுணர்ச்சியின்றி இயற்கையை அழிக்கும் மனிதருக்கு பூமி மனிதர்களுக்கானது மட்டுமில்லை என உரைக்கிறது இதில் வரும் செவ்விந்திய கதைகள். செவ்விந்தியர்கள் வெள்ளையர்களிடம் அடிமைப்பட்ட விதத்தினை சிறுவர்களுக்கான கற்பனை கதையாக பதிந்திருப்பது குறிப்பிடதக்கது. அதிக கற்பனைகள் மட்டுமின்றி வேறொரு நிலவமைப்பின் பண்பாடு, நம்பிக்கை, வரலாறு போன்றவற்றையும் இந்நூல் நமக்கு காட்டுகிறது. சிறுவர்களுக்கான வாசிப்பையும் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய அறத்தையும் வாசிப்பில் ஒருங்கேயளிக்கிறது.

கவுதாரிகள் ஏன் படபடக்கின்றன என்பதற்காக சொல்லப்படும் காரணத்தை செவ்விந்திய குடிகளின் கற்பனைக்கு சான்றாக குறிப்பிடலாம். மிக எளிமையாக செம்மையான முறையில் சரவணன் பார்த்தசாரதி மொழிபெயர்த்துள்ளார். சிறுவர் புத்தக வரிசையில் சற்றே வித்தியாசமான முயற்சி இந்நூல்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)