பதிவு செய்த நாள்

30 ஜூன் 2018
12:07

நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனம் கடந்த 20 வருடங்களாக புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த வருடம் 21வது புத்தக கண்காட்சியை நேற்று (ஜூ-29) ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார். நெய்வேலி லிக்னைட் ஹாலில் நடைபெற்று வரும் இந்தப் புத்தக கண்காட்சி ஜூலை 8ம் தேதி நிறைவடைகிறது.

170க்கும் அதிகமான  அரங்குகள் மற்றும் சாகித்ய அகாடமி, தேசிய புத்தக நிலையம், மத்திய அரசின் பதிப்பகத்துறை போன்ற 150க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பதிப்பகங்கள் கண்காட்சியில் பங்கேற்றிருக்கின்றன.

வார நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் கண்காட்சி நடைபெறும். பெரியவர்களுக்கு நுழைவுக்கட்டணமாக 5 ரூபாய். மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அனைத்து நாட்களுக்கும் சேர்த்து 10 ரூபாய் சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது.

புத்தகக் கண்காட்சித்திடலில் அமைந்துள்ள லிக்னைட் அரங்கில், பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. ஒய்.ஜி மகேந்திரன் வழங்கும் '3ஜீ' நாடகம், மதுரை முத்துவின் 'சிரித்து வாழ வேண்டும்', லேனா தமிழ்வாணனின் 'வாசிப்பும், சுவாசிப்பும்' பேராசிரியர் சிவகாசி ராமச்சந்திரனின் பட்டிமன்றம் உள்பட மேஜிக் நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சிகள் இக்கண்காட்சியின் வெவ்வேறு நாள்களில் நடைபெறவிருக்கின்றன.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)