தலைப்பு : கணக்கை மறந்த நிலா!
ஆசிரியர் : தமிழாக்கம்: டி.மதன்ராஜ்
பதிப்பகம் : நேஷனல் புக் டிரஸ்ட்
விலை : 40/-

பதிவு செய்த நாள்

05 ஜூலை 2018
16:49

  அழகுநிலாவுக்கு ஓர் ஆசை வந்தது. நட்சத்திரங்கள் மொத்தம் எத்தனை உள்ளன? ஒன்று,இரண்டு,மூன்று என்று எண்ணத் தொடங்கியது. எண்ணிக்கை லட்சக்கணக்கில் தொடர்ந்தபோது, பொழுதுவிடிந்து, சூரியன் வந்துவிட்டது. நட்சத்திரங்கள் மறைய, நிலா, எதுவரை எண்ணினோம் என்பதை மறந்துவிட்டது.

அடுத்த நாளும் எண்ணத் தொடங்கியது. அதே கதைதான். சூரியன் வந்ததும் நட்சத்திரங்கள் மறைந்துவிட்டன.

இது தொடர்ச்சியாக நடக்க, நிலாவால் தன் தோல்வியைத் தாங்க முடியவில்லை. அதற்கு அழுகை வந்தது.

நிலா அழுவதைப் பார்த்து, விஷயத்தைத் தெரிந்துகொண்டது சூரியன் “நான் உனக்கு உதவுகிறேன். நட்சத்திரங்களை நானே எண்ணிச்சொல்கிறேன்” என்றது.

சுற்றிமுற்றிப் பார்த்தும், சூரியனின் கண்களுக்கு ஒரு நட்சத்திரம்கூடத் தென்படவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்து நிலாவிடம் விஷயத்தைச் சொன்னது. நிலாவோ, “நீ சொன்னபடி, நட்சத்திரங்களின் எண்ணிக்கையைச் சொல்லும்வரை நான் உன்னுடன் பேச மாட்டேன்” என்று சொல்லிவிட்டது.

சூரியன் மறுபடியும் தேடத் தொடங்கியது. மேகங்களுக்கு இடையே, மலைகளுக்கு அடியில், மரங்களுக்கு இடையே, மலைகளுக்கு அடியில், மரங்களுக்கு இடையே என்று பல இடங்களில் தேடியும் சூரியனால் ஒரு நட்சத்திரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்குள் மாலை ஆகிவிட, சோகத்துடன் திரும்பி வந்தது சூரியன்.

ஒரு கிராமத்தில் சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஆடிப்பாடிக்கொண்டு இருப்பதைக் கண்டது. உடனே, ‘பூமியில் எத்தனை குழந்தைகளோ, வானத்தில் அத்தனை நட்சத்திரங்கள்’ என்று உணர்ந்தது. உடனடியாக மகிழ்ச்சியுடன் நிலாவிடம் ஓடி வந்தது.

“நிலாவே, வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்” என்று சொல்லி, தான் உணர்ந்த்தையும் சொன்னது.

அன்று முதல், நிலா மீண்டும் இரவினில் வெளியே வரத் தொடங்கியது. இரவு முழுக்க நட்சத்திரங்களைக் கண்டு மகிழும் நிலா, காலையில் பொழுது விடியும்போது தென்படும் சிறுவர்களைப் பார்த்துப் பாடும்: “பூமியில் எத்தனை குழந்தைகளோ, வானத்தில் அத்தனை தாரகைகள்”. 

   -விஸ்வநாதன் தேவராஜன்.

நன்றி: பட்டம்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)