பதிவு செய்த நாள்

06 ஜூலை 2018
17:19

விஞர் ஆத்மாநாமின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும்  மெய்ப்பொருள் பதிப்பகம் கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையைக் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. அவ்வருடத்தில் இருந்து தொடர்ந்து கவிஞர் ஆத்மாநாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு கவிஞர் இசைக்கும், 2016ஆம்  ஆண்டு  ‘மீகாமம்’ தொகுப்புக்காகக் கவிஞர் க.மோகனரங்கனுக்கும், 2017ஆம் ஆண்டு 'பெருங்கடல் போடுகின்றேன்' தொகுப்புக்காகக் கவிஞர் அனாருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.

போகன் சங்கர்
போகன் சங்கர்

இந்த வருடத்திற்கான விருது குறித்து ஆத்மாநாம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதற்கட்டமாக ரவிசுப்ரமணியன், கரிகாலன், சல்மா, க. மோகனரங்கன், அனார், இசை மற்றும் கிருஷ்ண பிரபு ஆகியோர் அடங்கிய நடுவர் குழு 2018ம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருதுக்குரிய கவிதைத் தொகுப்பை தேர்ந்தெடுக்க சிறுபட்டியலை பரிந்துரைத்து இருந்தார்கள். அக்குழு 2015 முதல் டிசம்பர் 2017 வரை வெளிவந்த கவிதை நூல்களிலிருந்து  சிறுபட்டியலை தேர்ந்தெடுத்து அளித்து.   தேர்வுச் செய்யப்பட்ட சிறுபட்டியல் 2018 மே மாதம் வெளியிடப்பட்டது.

இரண்டடுக்குத் தேர்வு முறையில் விதிகளுக்கு உட்பட்டு அச்சிறு பட்டியலிலிருந்து கவிஞர் சுகுமாரன்,எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் யுவன் சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு விருதாளரைத் தேர்வுசெய்து சமர்ப்பித்தது.  நடுவர் குழுவின் முடிவின்படி இந்த ஆண்டுக்கான ரூ.25000/- பரிசுத் தொகை அடங்கிய கவிஞர் ஆத்மாநாம் விருது  ‘சிறிய எண்கள் உறங்கும் அறை’ தொகுப்புக்காக  கவிஞர் போகன் சங்கருக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.” என தெரிவித்திருக்கிறார்கள்.

கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது - 2018 அடுத்த மாதம் அறிவிக்கப்படும். கவிஞர் ஆத்மாநாம் விருது வழங்கும் விழா  சென்னையில் 2018, அக்டோபர்  மாதம் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குக் கவிக்கோ மன்றத்தில் நடைபெறும்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)