பதிவு செய்த நாள்

07 ஜூலை 2018
13:25
மணல்வீடு - சிற்றிதழ்

  தமிழின் சிறுபத்திரிக்கை சூழலில் தொடர்ந்து பத்து வருடங்களாக காலாண்டு இதழாக வெளிவருகிறது ‘மணல்வீடு’ இதழ். அச்சு தரத்துடனும் சிறந்த வடிவமைப்புடனும் கொண்டு வரப்படும் சிற்றிதழ்கள் தமிழில் மிகமிகச் சிலவே. அவ்வகையில் பதிப்பு தரத்திலும் கவனம் செலுத்தி வெளியாகிறது இவ்விதழ். இதன் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன்.

இலக்கிய கலை வடிவங்களுக்கு மட்டுமின்றி நிகழ்த்து கலைகளான தொல்கலைகள், நுண்கலைகள் ஆகியவற்றுக்கும் தொடர்ந்த கவனத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறுபத்திரிக்கை சூழலில் இது ஒரு முன் உதாரண முன்னெடுப்பாகும். புதிய படைப்பாளார்கள், தரமான படைப்புகள் இதன் அடையாளமாகும்.

கடந்த ஏப்ரலில் இதன் 32-33வது இதழ் வெளியாகியுள்ளது. கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றுடன் இருபதிற்கும் மேலான படைப்பாளர்களின் பங்களிப்பு இதில் இடம்பெற்றுள்ளது. நாஞ்சில் நாடன், ஷோபாசக்தி, ஜீ.முருகன், பிரம்மராஜன் இவர்களுடன் மேலும் பல புதிய படைப்பாளர்களின் மாறுபட்ட படைப்புகளுடன் சிறந்த வடிவமைப்பு நேர்த்தியுடன் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)