பதிவு செய்த நாள்

08 ஜூலை 2018
15:16
'மேலும்’ விமர்சன விருது வழங்கும் நிகழ்வு

’மேலும்’ அமைப்பின் சார்பாக வழங்கப்படும் விருது விழா 08-07-2018 ஞாயிறன்று இக்சா மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர்.வீ.அரசு, எழுத்தாளர் பாரதி பாலன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்வு தமிழின் திறனாய்வுப்போக்கு குறித்த கலந்துரையாடலையும் உள்ளடக்கி முழுநாள் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எழுத்தாளர் தமிழவன், விமர்சகர்கள் ஜமாலன்,ஷண்முகம், பேரா.பெ.மாதையன். நிதா எழிலரசி ஆகியோர் கலந்து சிறப்பு செய்தனர்.

இதில் தொடக்கவுரையை நிகழ்த்திய பேரா.வீ.அரசு தமிழின் விமர்சனப்போக்கினையும் அதில் இருட்டடிப்பு செய்யப்பட்ட ஆளுமைகளையும் குறித்து தெளிவான வாதத்தை முன் வைத்தார். வையாபுரிப்பிள்ளையை ஒரு விமர்சகராக கருதாமல் போனதற்கு அத்தகையை வாசிப்பு முறைமை தமிழில் இல்லாமல் போனதே காரணம் என்பதை குறிப்பிட்டார். ரசனை அடிப்படையிலான விமர்சனப்போக்குகள் எவ்வாறு மார்க்சிய, பொருள்முதல்வாத விமர்சனப்போக்கினை எத்தகையை தார்மீக தத்துவங்களுமில்லாமல் மறுதளித்தன என்பதனை தன் உரையில் சுட்டிக்காட்டினார். இதனை சார்ந்த மறு விவாதங்களுக்கு ‘சிற்றேடு’ இதழ் எத்தகைய பங்களிப்பினை அளிக்கிறது எனவும் விளக்கினார்.

இதனை தொடர்ந்து எழுத்தாளர் பாரதிபாலனும் பேரா.வீ.அரசின் கருத்தை வழிமொழிந்து உரையாற்றினார். புத்தக வாசிப்பானது தற்போது எவ்வாறு குறைந்து வருகிறது என்பதை விளக்கினார். இத்தகைய விமர்சன நிகழ்வுகள் தற்போது ஏன் அவசியம் என்பதையும் விளக்கினார்.

தொடக்கவுரைக்கு பிறகு பேராசிரியர்கள்,ஆய்வு மாணவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலந்தாய்வில் பார்வையாளர்களும் தங்கள் கருத்தினை பகிராலம் என எழுத்தாளர் தமிழவன் மகிழ்ச்சியூட்டினார். சிவசுவும் வழக்கமான மேடை நிகழ்வுகளாக இக்கலந்துரையாடல் அமைய வேண்டாமென உற்சாகமாக அறிவித்தார்.

மாலையில் விருது வழங்கும் நிகழ்வும் தமிழின் முக்கிய ஆளுமைகளை பாராட்டும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)