தலைப்பு : வால் இழந்த எலி
ஆசிரியர் : தமிழாக்கம்: ஆர்.ஷாஜஹான்
பதிப்பகம் : நேஷனல் புக் டிரஸ்ட்
விலை : 30/-

பதிவு செய்த நாள்

14 ஜூலை 2018
16:57

  ஓர் ஊரில் ஓர் எலி வசித்து வந்தது அதன் நீளமான வாலைப் பார்த்து மற்ற எலிகள் பாராட்ட, அதற்கு கர்வம் வந்துவிட்டது அந்தக் குட்டி எலி தன் ஓரக்கண்ணால் வாலைக் கர்வத்துடன் பார்த்தபடி இருப்பதைப் பார்த்த மற்ற எலிகள், அதற்கு ’ஓரக்கண்ணி’ என்று பெயர் சூட்டிவிட்டன. குட்டி எலியின் அம்மா முதற்கொண்டு அனைவரும் இதே பெயரைக் கொண்டு அதை அழைக்க ஆரம்பித்தனர்.

ஓரக்கண்ணி தன் வாலைச் சுருட்டிக் கொண்டை போட்டு , பூச் சூட்டிக்கொள்ளும். அங்கும் இங்குமாக நடக்கும். சமயங்களில், தனது வாலை ‘ஸ்கார்ஃப்’ போலச் சுருட்டிக் கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொள்ளும். பேசும்போது வாலை ஆட்டி ஸ்டைலாக பேசும்.

தூங்கும்போதும், வாலையேதலையணையாகச் சுற்றி தலைக்கு வைத்துக்கொள்ளும். ஓரக்கண்ணியின் சகோதரிகளுக்குமே இந்த கர்வம் பிடிக்கவில்லை. குளத்தில் நீர் பிடித்து வருவது ஓரக்கண்ணிக்கு மிகவும் பிடித்த வேலை. வாலையே சும்மாடு போலச் சுற்றி, அதன் மீது குடத்தை வைத்து, நடந்து வருவாள் ஓரக்கண்ணி.

ஓரக்கண்ணியின் வீட்டருகே ஒரு சிலந்தி டாக்டர் வசித்துவந்தது. அது ஒரு கிழட்டுப் பூனையைப் பற்றி எச்சரிக்கும் ஓரக்கண்ணியோ அந்தப் பூனையால் ஆபத்து வராது என்று நினைத்தது.

ஒரு நாள், ஓரக்கண்ணியை ஒரே தாவலில் வாலைப் பிடித்தது பூனை. ஓரக்கண்ணி தனது பலம் கொண்ட மட்டும் இழுக்க, வால் துண்டாகிவிட்டது. பூனை அந்த வாலை வைத்து விளையாடியது. அழுதவாறே தன் வாலைக் கேட்டது ஓரக்கண்ணி.

பூனை,”எனக்குப் பாலைக் கொண்டு வா, உனக்கு வாலைத் தருகிறேன்” என்றது. அதன் பிறகு பாலைத் தேடி எலியின் பயணம் தொடர்கிறது.

ஒருவருக்கொருவர் சார்ந்து வாழ்தலே வாழ்க்கை என்ற ஒரு கருத்தை நமக்கு உணர்த்துகிறார் கதாசிரியர் எம்.சி,கேப்ரியேல், நாட்டுப்புறக் கதையொன்றைத் தழுவி எழுதப்பட்ட இந்தச் சிறுவர் கதையை தனது வண்ணமயமன ஓவியங்களால் மெருகூட்டுகிறார், ஓவியர் தத்தா.                                -விஸ்வநாதன் தேவராஜன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)