பதிவு செய்த நாள்

15 ஜூலை 2018
16:30

”இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனின் இடம் என்ன?” என்ற கேள்வி புகழ்பெற்றது. இதனை எழுப்பிய சீன தத்துவமான தாவோயிசத்தை உருவாக்கியவர் லாவோ ட்சு (Lao Tzu).

பொது ஆண்டிற்கு முன் 6ஆம் நூற்றாண்டில் லாவோ ட்சு வாழ்ந்திருக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை. அவரைப்பற்றி நாம் அறிந்துள்ள பெரும்பாலான தகவல்கள் சு-மா ச்சாடெயின் (காலம்: 136 பொ.ஆ.மு 86 பொ.ஆ.மு.) என்ற வரலாற்று ஆசிரியரின் குறிப்புகளில் இருந்து கிடைத்தவையே.

அவர் ‘பெரும் வரலாற்றாசிரியரினின் பதிவுகள்’ என்ற நூலை எழுதியுள்ளார். அதில் ‘லாவோ ட்சு’ என்ற பெயர் ஒரே ஒரு நபரைக் குறிக்கிறதா என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும், தான் அறிந்த வகையில் மூன்று லாவோட்சுகள் வாழ்ந்துள்ளனர். என்றும் அந்த நூலில் குறிப்பிடுகிறார்.

சு-மாவின் கூற்றுப்படி, முதல் லாவோ ட்சுவின் பெயர் லி டான் அவர் கன்பூசியஸின் காலக்கட்டத்தைச் சேர்ந்தவர். அரசு ஆவணக் காப்பகத்தில் வேலைசெய்த இவர், கன்பூசியஸூடன் நேரடியாக உரையாடியவர் என்கிறார்.


இரண்டாவது லாவோ, 15 பாகங்கள் கொண்ட ஒரு நூலை எழுதியவர். அவர் தான் தாவோயிசத்தை (Taoism) உருவாக்கி உலகிற்கு அளித்தவர். இது பற்றி மேலதிகத் தகவல்கள் தனக்குத் தெரியாதென்றும் சு-மா கூறுகிறார்.

மூன்றாவது லாவோ, ச்சோ(chou) நகரைச்சேர்ந்த ஒரு வரலாற்றாசிரியர். இவர் கன்பூசியஸியற்கு 129 ஆண்டுகள் பின்னால் வாழ்ந்தவர் என்கிறார் சு-மா.

மேற்கண்ட மூன்று நபர்களைப் பற்றியும் நம்பகமான விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், சீன நம்பிக்கைகளின்படி லாவோ ட்சு தனது இறுதிக்காலத்தில் எருமை மீது ஏறி மேற்கு நோக்கிச் சென்றதாகக் கருதப்படுகிறது.

கன்பூசியஸிற்கும், லாவோ ட்சுவிற்கும் இடையே விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அவை எல்லாவற்றிலும் லாவோ ட்சுவே வென்றதாக சீனாவின் கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. ஆனால் இவையெல்லாம் தாவோயிசத்தைப் பரப்பும் நோக்கில் சொல்லப்பட்ட கட்டுக்கதைகள் என்று நவீன ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சீன மொழியில் லாவோ ட்சு என்றால், ’மூத்தவர்’, ’கிழவர்’ என்று பொருள். ‘அறிவால் முதிர்ந்தவர்’ என்ற பொருளில்தான் இச்சொல் பெரும்பாலும் கையாளப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், மேலும் பல லாவோ ட்சுகள் வாழ்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

  - பாசன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)