தலைப்பு : கலியுகக் கிழவியும் ஓநாய்க் குட்டிகளும்
ஆசிரியர் : தமிழில்: பா.ஜெய்கணேஷ்
பதிப்பகம் : பரிசல் புத்தகநிலையம்
விலை : 350/-

பதிவு செய்த நாள்

17 ஜூலை 2018
15:17

 நூல் குறித்து எழுத்தாளர் சல்மா...

வரலாறு என்பது பெண்களுக்கு என்றுமே கடினமானதாகவும், வலியும் போராட்டமும் நிறைந்ததுமாகவே இருந்து வருகிறது. அனைத்துக் கால கட்டங்களிலும், பெண்களின் வாழ்வு கண்காணிப்பின் கீழும், பாதுகாப்பின் பிடியிலும் இன்றுவரை உள்ளது. அதிகாரத்தின் குறியீடாகவும் போராட்டங்களின் அடையாளாமாகவும் பெண்களின் வாழ்வு இருந்தும், அதனுடன் இணைக்கப்பட்ட வலியும், அடக்குமுறையும் வரலாற்றின் காலப் புத்தகத்தில் பதியப்படாமலும் மறைக்கப்பட்டுமிருந்து வருகிறது.

கலியுகக் கிழவியும் ஒநாய்க் குட்டிகளும் என்னும் இந்நாவல் வரலாறு நெடுகிலும் மறைக்கப்பட்ட பெண்களின் வாழ்வினைப் பற்றிய விவாதத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அதன் சமகால நவநாகரிக உலகில் பெண்கள் தங்களின் அடையாளத்தை உணர்ந்து மீட்டுருவாக்கம் செய்துகொள்ளவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

மிகச்சிறந்த கலைத்திறனுடன் படைக்கப்பட்டிருக்கும் இந்நாவல், நவீனகால வாழ்வின் கடினமான கட்டமைக்கப்பட்ட கருப்புப் பக்கங்களையும் அதைச் சூழ்ந்துள்ள காரணிகளையும் மிக நுணுக்கமாக அலசுகிறது.

இந்நாவல் வாழ்வின் கடினமான கட்டமைக்கப்பட்ட பக்கங்களைக் கடந்து, கறைப்படுத்தும் காரணிகளை நீக்கி மனதினை வளமான முறையில் கட்டமைத்து வாழ்வினை நடத்திட அழகியலுடன் படைக்கப்பட்டுள்ளது.

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)