தலைப்பு : பொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை
ஆசிரியர் : ஸ்ரீவள்ளி
பதிப்பகம் : சஹானா
விலை : 100/-

பதிவு செய்த நாள்

17 ஜூலை 2018
16:01

 சமீபத்தில் வெளியான கவிதை தொகுப்பு. ஸ்ரீவள்ளி (எ) பெருந்தேவியின் கவிதைகள் முகநூலில் பகிரப்பட்ட பொழுதே பெரிதும் விரும்பி  வாசிக்கப்பட்டன. ஸ்ரீவள்ளியின் கவிதைகள் முற்றிலும் காதல் சார்ந்தவை. பிற காதல் கவிதைகளின் இருந்து அவற்றை வேறுபடுத்துவது அவை வெளிக் கொண்டு வரும் சங்க கவிதைகளின் நீட்சி. ஸ்ரீவள்ளியின் எந்தக்கவிதையும் குறுந்தொகையிலோ ஐங்குறுநூற்றிலோ எந்த ஒரு சிக்கலுமின்றி சென்று அமர்ந்து கொள்ளும். இந்த கவிதைகளின் நவீனம் என்பது அவை வெளிக் கொண்டு வரும் பழமை.

துணைத்த கோதைப் பணைப் பெரும் தோளினர்
கடலாடு மகளிர் கானல் இழைத்த
சிறு மனைப் புணர்ந்த நட்பே தோழி
ஒரு நாள் துறைவன் துறப்பின்
பன்னாள் வரூஉம் இன்னாமைத்தே.

என்ற குறுந்தொகை பாடலின் நீட்சியாகவே ஸ்ரீவள்ளியின் இந்த கவிதை பிடிபடுகிறது. 

இதே மணற்கரையில் என்னோடு
வேறு சிலர் சிற்றிலைக் கட்டுகிறார்கள்
இதைவிட வசீகரமாக விஸ்தாரமாக 
ஏனோ என் ஏழைமைச் சிற்றிலைத் தவிர
அவை உன் கண்ணில் படுவதில்லை
அவற்றை நீ சிதைப்பதுமில்லை
உன் இரக்கமின்மையை காதலென்று
எண்ணிக்கொள்ள என்னைப் போல
அவர்களுக்கு வாய்ப்பதில்லை
எனக்கு மட்டுமே கையளிக்கப்பட்ட அருள்
என் ஒரே ஆறுதல்

’இதை வாசிக்கும் போதுதான் காதல் கவிதைகள் வாசித்து நீண்ட காலமாகிறது என்பது நினைவுக்கு வருகிறது’ என்ற கவிஞர் சமயவேலின் பின்னட்டை குறிப்பு இத்தொகுப்பிற்கு முற்றிலும் பொருத்தமானதாகும்

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)