பதிவு செய்த நாள்

18 ஜூலை 2018
14:28

  வாரந்தோறும் வாசகசாலை மற்றும் அசோக் நகர் வட்டார நூலகம் இணைந்து நடத்தும் ‘மனதில் நின்ற கவிதைகள்’ நிகழ்வில் நேற்று (ஜூலை 17) நா.காமராசன், நகுலன், தமயந்தி ஆகியோரது கவிதைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

நா. காமராசன் கவிதைகள் குறித்து பேசிய தயாநிதி, அவரின் புரிதலில் கவிதையை அலசி, திருநங்கைகளின் மீதான தன் பார்வை, அதனை மாற்றியமைக்க வைத்த கவிதையையும், அதன் வீச்சையும் விளக்கினார்.  மேலும் தன் மனம் கவர்ந்த கவிதைகளை வாசித்தும், தன் கருத்துக்களை பொருத்தியும் பேசிய பொழுது, கொடைக்கானல் அருகே காட்டுப்பகுதிகளில் வசிக்கும் பளியர்  இனத்தவர் குறித்து குறிப்பிடும்போது, அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை, (கல்வி, மருத்துவம், வசிப்பிடம்) மேம்படுத்துதல் தொடர்பான திருத்தங்கள், அதன் மீதான கருத்துப் பரிமாற்றங்கள், அதன் அவசியம் என்று பல்வேறு கோணங்களில் தனது கருத்தை முன்வைத்தார்.

நகுலன் கவிதைகள் குறித்து சூர்ய பிரபா பேசத் தொடங்கினார். முதல் மேடை என்றுதான் குறிப்பிட்டார். ஆனால், நிதானமாகவும் ஆழமாகவும் தான் தேர்ந்தெடுத்திருந்த கவிதைகளை பட்டியலிட்டு, கூடவே சில கவிதைகளை மேற்கோள்காட்டி உபயோகப்படுத்தியவாறே நகுலனையும் அவரைப்பற்றிய சில செய்திகளையும் பகிர்ந்தார்.

அடுத்து கவிஞர் தமயந்தியின் கவிதைகள் குறித்து சாந்தகுமார் பேசினார். ஆண்கள், தங்களின் ஆணாதிக்க சிந்தனைகளை சீர்த்தூக்கி ஆய்வு செய்துகொள்ள தூண்டிவிடும் ஆற்றல் பெற்ற கவிதைகளுக்கு சொந்தக்காரி கவிஞர் தமயந்தி என்று குறிப்பிட்டார். நிகழ்வின் இறுதியாக மேற்குறிப்பிட்ட கவிஞர்களின் கவிதைகள் குறித்து நிகழ்வுக்கு வந்திருந்த வாசகர்களும் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்தனர். ஒரு நல்ல கலந்துரையாடலாக நிகழ்வு நிறைவுற்றது.

- சுபஸ்ரீ முரளிதரன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)