பதிவு செய்த நாள்

30 ஜூலை 2017
13:09
சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு!

சென்னையில் நடந்துவரும் புத்தகத் திருவிழாவில் “தமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம்” சார்பில் வருடம்தோறும் சிறந்த நூல்களுக்கான விருது அறிவிக்கப்படும். இந்த வருடமும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவித்திருக்கிறார்கள்.சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான விருதை உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் தேவதச்சனி “மர்மநபர்” தொகுப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்து எழுத்தாளர் அகரமுல்வன் எழுதிய “முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு” என்கிற தொகுப்பிற்கு சிறுகதைப் பிரிவில் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தொகுப்பை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

ராமச்சந்திர வைத்யநாத் எழுதிய பாரதி புத்தகாலயம் வெளியீடாக வந்திருக்கும் ”சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும்” என்கிற வரலாற்று நூலிற்கும், க்ரியா பதிப்பகத்தின் வெளியீடான “தட்டான், ஊசித்தட்டான்கள்” என்கிற நூலிற்கு சுற்றுச்சூழல் பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாவல் பிரிவில், அகநி வெளியீடாக ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் எழுதிய ”1801” நாவலுக்கும் , கயல் கவின் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் பா.ஜீவசுந்தரி எழுதிய “ரசிகை பார்வை, உச்சியில் மிளிர்ந்த தாரகைகள்” நூலுக்குப் பெண்ணிய பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி பிரிவில், அரும்பு வெளியீடான சூ.ம.ஜெயசீலனின் “இது நம் குழந்தைகளின் வகுப்புறை” என்கிற நூலுக்கும், மொழிபெயர்ப்பு பிரிவில், ”தாகங்கொண்ட மீனொன்று” ( ஜலாலுத்தீன் ரூமி கவிதைகள் : தமிழில் - என்.சத்யமூர்த்தி) நூலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதி புத்தகாலயம் வெளியீடான “மேக்நாட் சாகா”(தேவிகாபுரம் சிவா) கட்டுரைத்தொகுப்பிற்கும், வானம் பதிப்பகம் வெளியீடான விழியன் எழுதிய ”கிச்சா பச்சா” நூலுக்கு சிறுவர் இலக்கிய புத்தகத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பரிசாக ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்”(பெரியார் தொகைநூல்) புத்தகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என்.சி.பி.எச் வெளியீடான இப்புத்தகத்தை பசு.கவுதமன் தொகுத்துள்ளார்.

விருது வழங்கும் நிகழ்வு 31ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கிறது. இந்நிகழ்வில் தரேஷ் அகமது ஐ.ஏ.எஸ், எழுத்தாளர் பிரபஞ்சன், மலையாள எழுத்தாளர் அசோகன் செருவில் ஆகியோ கலந்துகொள்கிறார்கள்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)